Bihar election 2025: பீகாரில் காலை 11 மணி நேர நிலவரப்படி 31.38 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
Bihar election 2025: பீகாரில் காலை 11 மணி நேர நிலவரப்படி 31.38 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Published on: November 11, 2025 at 12:35 pm
பாட்னா, நவ.11, 2025: பீகார் மாநிலத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை, நவ.11) இறுதி சுற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 31.38% வாக்குகள் பதிவாகியுள்ளன. பீகாரைப் பொறுத்தவரை கிஷன்கஞ்ச் 34.74% வாக்குகளுடன் முன்னிலையிலும், கயா 34.07% வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், ஜமுய் 33.69% வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
இதற்கிடையில், எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) மற்றும் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் பெரிய அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இரு தரப்பினரும் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: Delhi Red Fort Blast: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு.. அமித் ஷா தலைமையில் உயர் மட்ட கூட்டம்!
ஆர்.ஜே.டி நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் ஜா, மகா கூட்டணி வெற்றியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதல் கட்ட வாக்குப்பதிவில் காணப்பட்ட மாற்றம் “பெரிய அலையாக” மாறியுள்ளது, இது பீகாரில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியை வெளியேற்றும் என்று கூறியுள்ளார்.
பா.ஜ.க தொண்டர்கள் கைது
இதற்கிடையில், மோதிஹரி பகுதியில் பாஜக தேர்தல் சின்னத்தை காட்டியதாக பா.ஜ.க.வினர் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவில் 65 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெல்லி குண்டுவெடிப்பு.. மசூதியை கடந்து மெட்ரோ நிலையத்திற்கு வந்த கார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com