Bihar Assembly Election: நாடே எதிர்பார்க்கும் பீகார் சட்டமன்ற தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது.
Bihar Assembly Election: நாடே எதிர்பார்க்கும் பீகார் சட்டமன்ற தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது.

Published on: November 9, 2025 at 3:58 pm
Updated on: November 9, 2025 at 4:04 pm
பாட்னா நவம்பர் 9 2025; நாடு எதிர்பார்க்கும் பீகார் சட்டமன்ற தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்கு பதிவு நவம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தீவிர பரப்புரைகள் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி மேற்கு சம்பரன் மாவட்டத்தில் தனது தேர்தல் பரப்புரையை நிறைவு செய்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பரப்புரையானது பேட்டியா டவுன் பகுதியில் நடைபெறுகிறது.
இழந்த ஆட்சியைப் பிடிக்கும் வகையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் பீகாரில் தீவிர பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றன.
எனக்கு மக்கள் ஆதரவு
இந்த நிலையில் PTI செய்து நிறுவனத்திடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்,” மாநிலம் தழுவிய அளவில் நான் மக்களை சந்தித்துள்ளேன்; பீகார் மக்கள் தங்களது வாழ்த்துக்களையும், ஆசிர்வாதத்தையும் எனக்கு வழங்கியுள்ளனர். மாநிலம் தழுவிய அளவில் எனக்கு ஆதரவு உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் வெற்றி பெறும்” என்றார்.
ஆர் ஜே டி வேட்பாளர் மீது வழக்கு பதிவு
இதற்கிடையில் ஆர் ஜே டி வேட்பாளர் ஒருவரின் மீது தேர்தல் நடத்தை வீதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வேட்பாளர் பீகாரின் ஜாமு பகுதியைச் சேர்ந்த சம்சத் ஆழம் ஆலம் என்பவர் ஆவார்.
காங்கிரஸ் கண்டனம்
பீகார் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இறுதி பெரும்பான்மை பெறும் என பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கூறி இருந்தனர். இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது பிரதமர் நரேந்திர மோடிக்கும் உள்துறை அமைச்சருக்கும் எப்படி தெரியும் என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகா ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.
மீண்டும் நிதிஷ் சந்தேகம்தான்
தொடர்ந்து பீகாரின் அதிக ஆண்டு காலம் முதலமைச்சராக பதவி வகித்துள்ள நிதீஷ் குமார் மீண்டும் முதலமைச்சராக தொடர்வது சந்தேகம்தான் என காங்கிரஸின் மல்லிகார்ஜுன் கார்கே கூறினார். பாரதிய ஜனதா கட்சியினரின் பேச்சுகளை பார்க்கும் போது நிதீஷ் குமாருக்கு அவர்கள் மீண்டும் வாய்ப்பு வழங்க மாட்டார்கள் எனவே தெரிகிறது. அவர் முதலமைச்சராக தொடர்வது சந்தேகம்தான் என்றார்.
இதையும் படிங்க: 51 கோடி வாக்காளர்கள்.. தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்கள்.. வாக்காளர் தீவிர திருத்தம் தொடக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com