டெல்லியின் புதிய முதல் அமைச்சராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அதிஷி அறிவிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியின் புதிய முதல் அமைச்சராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அதிஷி அறிவிக்கப்பட்டுள்ளார்.
Published on: September 17, 2024 at 2:44 pm
Delhi New CM Atishi | புதுடெல்லி ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குப் பதிலாக புதிய முதலமைச்சராக அம்மாநில அமைச்சர் அதிஷியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இவர் துணைநிலை கவர்னர் வி.கே. சக்சேனாவை சந்தித்து பதவி அமைக்க உரிமைக் கோர உள்ளார். இதற்கு முன்னதாக தனது ராஜினாமா கடிதத்தை அரவிச்த் கெஜ்ரிவால் மாலை 430 மணிக்கு துணை நிலை ஆளுநரிடம் ஒப்படைப்பார்.
இதற்கிடையில், அதிஷியை அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்த நிலையில் அவரை அனைத்து எம்எல்ஏக்களும் ஏற்றுக்கொண்டனர்.
முன்னதாக, கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளியே வந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15, 2024) 48 மணி நேரத்திற்குள் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் திட்டத்தை அறிவித்தார்.
அதிஷி பேட்டி
அப்போது, “ஆம் ஆத்மி அரசு நேர்மையான அரசா என்பதை டெல்லி மக்கள் முடிவு செய்ய அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அதிஷி டெல்லியின் 3வது பெண் முதல் அமைச்சர் ஆவார். தொடர்ந்து பேட்டியளித்த அதிஷி, “”அரவிந்த் கெஜ்ரிவாலின் வழிகாட்டுதலின் கீழ் நான் பணியாற்றுவேன், டெல்லி மக்களை பாதுகாப்பேன்” என்றார்.
தொடர்ந்து “ஆம் ஆத்மி கட்சியிலும், கெஜ்ரிவாலின் தலைமையிலும் மட்டுமே முதல்முறை அரசியல்வாதி ஒருவர் முதல்வராக முடியும். எனது மூத்த சகோதரர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா செய்வதில் வருத்தம் அடைகிறேன்” என்றார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலை தனது, “குரு” எனவும் கூறினார்.
இதையும் படிங்க : ‘நாட்டை துண்டாக்க பேராசைக்காரர்கள் பசியில் இருக்கிறார்கள்’: பிரதமர் நரேந்திர மோடி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com