Ashwini Vaishnaw | பண்டிகை காலத்தை முன்னிட்டு 6 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்தார்.
இது குறித்து அவர், “பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், துர்கா பூஜை, தீபாவளி மற்றும் சத் திருவிழாக்களுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான பயணிகள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனால் 6 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மேலும், பண்டிகைக் காலங்களில் ஏற்படும் கூடுதல் நெரிசலைக் கவனித்துக்கொள்ள 12,500 பெட்டிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன” என்றார். தொடர்ந்து, “பல ரயில் வழித்தடங்கள், குறிப்பாக பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்குச் செல்லும் வழித்தடங்கள், துர்கா பூஜை, தீபாவளி மற்றும் சத் பண்டிகைகளின் போது அதிக நெரிசலைக் காண்கின்றன” என்றார்.
இதையடுத்து, “கடந்த ஆண்டு 4,429 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு விழாக்காலத்திற்காக இதுவரை மொத்தம் 5,975 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன” என்றார். துர்கா பூஜை அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்குகிறது, தீபாவளி அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படும், சாத் பூஜை இந்த ஆண்டு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Rahul Gandhi’s soldiers protest: இந்தியா AI இம்பாக்ட் சம்மிட் 2026-இல், இந்திய யூத் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து சட்டை கழற்றி போராட்டம்…
Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதம் 11ஆம் தேதி திருச்சி மாநகர் வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது….
Rajya Sabha Election: தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களில் 37 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் மார்ச் 16, 2026 அன்று நடைபெற உள்ளது என இந்திய தேர்தல்…
Narendra Modi: வங்கதேச நாட்டின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியா வர பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்….
G7 Summit in France: 52வது ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்….
India AI Impact Summit: டெல்லியில் ஏ.ஐ மாநாடு நடைபெற்றுவரும் நிலையில், உலக தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்