Amit Shah : “இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவாகும்” என உள்துறை அமித்ஷா கூறியுள்ளார்.
Amit Shah : “இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவாகும்” என உள்துறை அமித்ஷா கூறியுள்ளார்.

Published on: January 13, 2026 at 9:01 pm
காந்திநகர், ஜன.13, 2026: உள்துறை மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் அமித்ஷா, “அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவாகும்” என்று தெரிவித்துள்ளார். காந்திநகர் மாவட்டம் மான்சா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், 267 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார்.
அப்போதுஅமித்ஷா, “2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை அனைத்து துறைகளிலும் உலகின் முன்னணி நாடாக மாற்ற அரசாங்கம் உறுதியாக செயல்படுகிறது” என்றார்.
மேலும், சோமநாத் கோவில் நாட்டின் அடையாளமும் சுயமரியாதையும் எனக் குறிப்பிட்டு, ஆயிரம் ஆண்டுகள் பழமையான அந்த கோவிலின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் சோமநாத் சுயமரியாதை பர்வா ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என தெரிவித்தார்.
இதையடுத்து அமித்ஷா, “அகமதாபாத் உலகளாவிய விளையாட்டு மையமாக உருவெடுத்து வருகிறது. 2036 ஒலிம்பிக் போட்டிகளை அங்கு நடத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மான்சாவில் புதிதாக கட்டப்பட்ட விளையாட்டு வளாகத்தை உள்ளூர் வீரர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.
மற்றொரு நிகழ்வில், காந்திநகரில் உள்ள குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தின் BSL-4 பயோகண்டெயின்மென்ட் வசதியைத் தொடங்கி வைத்து உரையாற்றிய அமித்ஷா, “இந்தியாவின் பயோ பொருளாதாரம் 2014இல் 10 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 2024 இறுதியில் அது 166 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது” எனக் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொங்கல் தினத்தில் பிரதமர் மோடி அலுவலகம் மாற்றம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com