Amit Shah | Jammu and kashmir | “ஜம்மு காஷ்மீரை 3 குடும்பங்கள் சூறையாடின” என அமித் ஷா விமர்சித்துள்ளார்.

September 1, 2025
Amit Shah | Jammu and kashmir | “ஜம்மு காஷ்மீரை 3 குடும்பங்கள் சூறையாடின” என அமித் ஷா விமர்சித்துள்ளார்.
Published on: September 7, 2024 at 2:18 pm
Amit Shah | Jammu and kashmir | உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்முவில் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “ஜம்மு காஷ்மீரை 3 குடும்பங்கள் கொள்ளையடித்தன. தற்போது பயங்கரவாதத்தை மீண்டும் தலையெடுக்க விடக் கூடாது” என்றார்.
தொடர்ந்து பேசிய அமித் ஷா, “தேசிய மாநாட்டு கட்சி (NC) மற்றும் காங்கிரஸ் கல் வீசுபவர்களை விடுவிக்க விரும்புகின்றன. ரஜோரி மற்றும் பூஞ்ச் பகுதிகளில் பயங்கரவாதம் வளர வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். பிரச்சனை செய்தவர்களை சிறையில் அடைத்துள்ளோம். ஆனால், எல்லை பிரச்னையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். இதில் யாருக்கு லாபம்” என்றார்.
जम्मू में 'विजय संकल्प बूथ कार्यकर्ता सम्मेलन' में अपने भाइयों-बहनों के बीच आकर उत्साहित हूँ…
— Amit Shah (@AmitShah) September 7, 2024
https://t.co/0WlcDgt5FB
மேலும், “மெகபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் (PDP) தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி இணைந்து இப்பகுதியை “பயங்கரவாதத்தின் நெருப்புக்குள்” தள்ள முயற்சி செய்கின்றன” என்றார். தொடர்ந்து, “மூன்று குடும்பங்கள் ஜம்மு காஷ்மீரை சூறையாடிவிட்டன. தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பயங்கரவாதம் வரும்.
ஜம்மு மக்கள் அவர்களின் தலைவிதியை தீர்மானிக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், பயங்கரவாதத்தை தலை தூக்க அனுமதிக்க மாட்டோம்” என்றார். ராகுல் காந்தியின் மாநில அந்தஸ்து மீட்டெடுப்பு வாக்குறுதிக்கு பதிலளித்த அமித் ஷா, “ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து தருவதாக கூறியுள்ளார்.
அதற்கு அவருக்கு அதிகாரம் உள்ளதா? தேர்தலுக்குப் பிறகு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து திரும்ப வழங்கப்படும் என்று நான் நாடாளுமன்றத்தில் ஏற்கனவே கூறியுள்ளேன்” என்றார்.
இதையும் படிங்க : 5 ஆண்டுகளில் 51% வரை வளர்ச்சி: இந்த மியூச்சுவல் ஃபண்டுகள் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com