Aditya Thackeray: மகாராஷ்டிராவை அண்ணாமலை அவமதித்து விட்டார் என சிவசேனா (உத்தவ்) கட்சியின் ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.
Aditya Thackeray: மகாராஷ்டிராவை அண்ணாமலை அவமதித்து விட்டார் என சிவசேனா (உத்தவ்) கட்சியின் ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.

Published on: January 12, 2026 at 4:26 pm
மும்பை, ஜன.12, 2026: மகாராஷ்டிராவை அவமதித்து விட்டார் அண்ணாமலை.. ஆதித்ய தாக்கரேவை தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அவமதித்து விட்டார் என சிவசேனா (உத்தவ்) கட்சியின் ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் பரப்புரையின் போது பேசிய அண்ணாமலை, “மும்பை மாநகரம் மராட்டியத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல; இது சர்வதேச நகரம்” எனத் தெரிவித்து இருந்தார்.
இந்தக் கருத்தை சிவசேனா (உத்தவ்) கட்சியினர் அரசியலாக்கி வருகின்றனர். முன்னதாக இது தொடர்பாக ராஜ் தாக்கரே மற்றும் சஞ்சய் ராவத் உள்ளிட்டோர் அண்ணாமலைக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு இருந்தனர்.
ஆதித்ய தாக்கரே
இந்த நிலையில் ஆதித்ய தாக்கரே, “பாரதிய ஜனதா கட்சியில் கிட்டத்தட்ட ஜீரோ ஆகிவிட்ட அண்ணாமலை, மும்பை, மராட்டியத்தை பற்றி பேசியுள்ளார். தமிழ்நாடும், மகாராஷ்டிராவும் வேறு வேறு மாநிலங்கள். அண்ணமலை மும்பையை பற்றி எப்படி சொல்லலாம்? அந்த வகையில் அண்ணாமலையும், பாரதிய ஜனதாவும் மும்பையை அவமதித்து விட்டன. மக்கள் இதனை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 2020 டெல்லி கலவரம்: நான்கு பேர் ஜாமினில் விடுவிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com