Haryana Polls | ஹரியானாவில், காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
February 17, 2026
Haryana Polls | ஹரியானாவில், காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

Published on: September 9, 2024 at 10:56 pm
Haryana Polls | காங்கிரஸ் உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி வருகிறது. இந்நிலையில், ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை (செப்.9, 20245) வெளியிட்டது.
ஆம் ஆத்மியின் முதல் பட்டியலில் 20 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
பட்டியல் வெளியிடப்பட்ட உடன், ஆம் ஆத்மி ஹரியானாவில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தியது.
ஆம் ஆத்மி கட்சியின் ஹரியானா மாநிலத் தலைவர் சுஷில் குப்தா, ஹரியானாவில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அக்கட்சியின் இரண்டாவது பட்டியலும் விரைவில் வெளியிடப்படும் என்றார். வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 3 நாட்களே உள்ளன.
இதன்மூலம், ஹரியானாவில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தனித்தனியாக தேர்தலில் போட்டியிடும் என்று சுஷில் குப்தாவின் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
இதையும் படிங்க : காங்கிரஸூக்கு எதிராக சுயேச்சை வேட்பாளர்கள்; தேசிய மாநாட்டு கட்சி திட்டம் இதுதான்’: போட்டுடைத்த மெகபூபா முஃப்தி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com