Drug trafficking in Punjab: பஞ்சாப்பில் இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் போதைப்பொருள் கடத்தியதற்காக கைது செய்யப்பட்ட ஆறு பேரில் அரசுப் பள்ளி ஆசிரியை உட்பட இரண்டு பெண்கள் அடங்குவர் என்று பஞ்சாப் காவல்துறை இன்று (செப்.18, 2025) தெரிவித்துள்ளது.
Drug trafficking in Punjab: பஞ்சாப்பில் இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் போதைப்பொருள் கடத்தியதற்காக கைது செய்யப்பட்ட ஆறு பேரில் அரசுப் பள்ளி ஆசிரியை உட்பட இரண்டு பெண்கள் அடங்குவர் என்று பஞ்சாப் காவல்துறை இன்று (செப்.18, 2025) தெரிவித்துள்ளது.
Published on: September 18, 2025 at 8:14 pm
Updated on: September 18, 2025 at 8:17 pm
சண்டிகர், செப்.18, 2025: பஞ்சாப்பில் இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் போதைப்பொருள் கடத்தியதற்காக 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அரசு பள்ளி ஆசிரியை உள்பட 2 பெண்கள் அடங்குவார்கள் என பஞ்சாப் மாநில காவல்துறை இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது. மேலும், இவர்களிடம் இருந்து போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஹனி (18), பரம்தீப் சிங் என்ற பராஸ் (18), ஹர்விந்தர் சிங் என்ற ஹிந்தா (19), குர்பிரீத் சிங் என்ற கோபி (25) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை இயக்குநர் ஜெனரல் கௌரவ் யாதவ் தெரிவித்தார். இவர்கள் அமிர்தசரஸைச் சேர்ந்த ஜஸ்பீர் கவுர் (40) மற்றும் குல்விந்தர் கவுர் (54) ஆகியோரை அடையாளம் காட்டியுள்ளனர். இதில், குல்விந்தர் கவுர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார் என அமிர்தசரஸ் காவல் ஆணையர் குர்பிரீத் சிங் புல்லர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எப்படி சிக்கினார்கள்?
மோகாவைச் சேர்ந்த ஜக்ப்ரீத் சிங் என்கிற ஜக்காவால் இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலை அமிர்தசரஸ் கமிஷனரேட் போலீசார் பிடித்தனர். இதைத் தொடர்ந்து, 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, முக்கிய குற்றவாளியான யாசின் முகமது கைது செய்யப்பட்டு, அவரது வசம் இருந்து 7.1 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மூளையை உண்ணும் அமீபா.. 19 பேர் மரணம்.. அச்சத்தில் கேரளம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com