Shiv Sena leaders murder case: சிவசேனா கட்சி பிரமுகர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Shiv Sena leaders murder case: சிவசேனா கட்சி பிரமுகர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Published on: March 15, 2025 at 2:19 pm
சண்டிகர் (பஞ்சாப்) மார்ச் 15, 2025: பஞ்சாப் மாநிலம் மோகா சிவசேனா தலைவர் மங்கத் ராய் வியாழக்கிழமை (மார்ச் 13, 2025) இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில், மோகா மாவட்டத்தில் சிவசேனா தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரை பஞ்சாப் காவல்துறை கைது செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ செய்திகள் சனிக்கிழமை (மார்ச் 15, 2025) வெளியாகின.
முக்த்சர் மாவட்டத்தில் உள்ள மாலவுட்டில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் மோகா மாவட்டத் தலைவராக இருந்த மங்கத் ராய் வியாழக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 12 வயது சிறுவன் ஒருவனும் காயமுற்றதாக போலீசார் தெரிவித்தனர். வியாழக்கிழமை இரவு மங்கா (52) தனது வீட்டிலிருந்து மங்காவை மளிகைப் பொருட்கள் வாங்க வெளியே வந்தபோது, இரவு 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் முதலில் மங்கா மீது குண்டுகள் தாக்கவில்லை. அருகில் இருந்த சிறுவன் மீது பாய்ந்தது.
இந்த நிலையில் பைக்கில் அங்கிருந்து தப்பிக்க நினைத்த மங்காவைஅந்தக் கும்பல் பின்தொடர்ந்து சென்று துப்பாக்கியால் சுட்டு கொன்றது. இந்த வழக்கில் தற்போது மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : டெல்லியில் இங்கிலாந்து பெண் பாலியல் வன்புணர்வு.. பரபரப்பு புகார்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com