Goa nightclub fire: கோவா நைட் கிளப்பில் (இரவு விடுதி) ஏற்பட்ட தீயில் சிக்கி 25 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
Goa nightclub fire: கோவா நைட் கிளப்பில் (இரவு விடுதி) ஏற்பட்ட தீயில் சிக்கி 25 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

Published on: December 7, 2025 at 11:06 pm
பனாஜி, டிச.7, 2025: கோவாவில் உள்ள நைட் கிளப் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 14 ஊழியர்கள் மற்றும் சில சுற்றுலாப் பயணிகள் உட்பட குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர்.
மாநிலத் தலைநகர் பனாஜியிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள பிர்ச் பை ரோமியோ லேன் இரவு விடுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தத் துயரச் சம்பத்துக்கு பிரதமர் நரேந்திரா மற்றும் கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் ஆகியோர் தங்கள் வேதனையை தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கோவா பாஜக எம்எல்ஏ மைக்கேல் லோபோ கூறுகையில், தீயணைப்பு வீரர்களும் காவல்துறையினரும் இரவு முழுவதும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு.. அல் ஃபலாஹ் பல்கலைக்கழக நிறுவனர் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com