Rajasthan: 150 கிலோ வெடிப்பொருள்களுடன் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Rajasthan: 150 கிலோ வெடிப்பொருள்களுடன் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published on: December 31, 2025 at 4:18 pm
ஜெய்ப்பூர், டிச.31, 2025: 2026 புதிய ஆண்டின் தொடங்கவுள்ள நிலையில், மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது இன்று (புதன்கிழமை) டோங்க் போலீஸின் மாவட்ட சிறப்பு குழு (DST) இரண்டு பேரை கைது செய்தது. அவர்களின் காரில் இருந்து 150 கிலோ வெடிபொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் ராஜஸ்தானின் புண்டி என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இது குறித்து டிஎஸ்பி மிர்த்யுஞ்ஜய் மிஸ்ரா பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “தகவல் அடிப்படையில் மாவட்ட சிறப்பு குழு (DST) பாரோனி போலீஸ் நிலையப் பகுதியில் ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தியது.
அப்போது, யூரியா உர மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 150 கிலோ அமோனியம் நைட்ரேட்டை பறிமுதல் செய்யப்பட்டது” என்றார். இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 புத்தாண்டு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் இது கடத்தப்பட்டதா? என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் குளிர் அலை, மோசமான காற்று, பனிமூட்டம்.. IMD எச்சரிக்கை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com