Manipur | மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 11 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Manipur | மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 11 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Published on: November 11, 2024 at 7:16 pm
Manipur | மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மெய்தி மற்றும் குகி சமூகத்தினரிடையே கலவரம் வெடித்து வருகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள ஜகுராதோர் என்ற இடத்தில் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர் .
என்கவுன்டர் செய்யப்பட்ட 11 பயங்கரவாதிகளும் குக்கி சமூகத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க குளிர்பானத்தில் போதை மருந்து: நீட் மாணவி பாலியல் வன்புணர்வு; 2 ஆசிரியர்கள் கைது
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com