தெலங்கானாவில் கனமழை காரணமாக 99 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
தெலங்கானாவில் கனமழை காரணமாக 99 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
Published on: September 1, 2024 at 9:28 pm
Updated on: September 1, 2024 at 9:29 pm
heavy rains in Telangana | ஹைதராபாத் உட்பட தெலுங்கானாவின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கனமழை தொடர்ந்து பெய்தது. ஞாயிற்றுக்கிழமை மகபூபாபாத் மற்றும் கம்மம் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதற்கிடையில், தனித்தனி சம்பவங்களில் 3 பேர் மாயமானதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கனமழை மற்றும் நீர் தேக்கம் காரணமாக தென் மத்திய ரயில்வே நெட்வொர்க்கில் குறிப்பிடத்தக்க இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக 99 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
நான்கு ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டன. மேலும், 54 ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மஹபூபாபாத் மாவட்டம், மரிபெடா மண்டலத்தில், நிரம்பி வழியும் ஓடையைக் கடக்கும்போது, தனது தந்தையுடன் சென்ற கார் அடித்துச் செல்லப்பட்டதில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, பெண் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: செப்டம்பரில் ‘லா நினா’; கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com