2024 ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி வசூல் நிலவரம் தற்போது வெளியாகி உள்ளது.
2024 ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி வசூல் நிலவரம் தற்போது வெளியாகி உள்ளது.
Published on: September 1, 2024 at 8:48 pm
2024 ஆகஸ்ட் மாதத்தில் 1.75 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி-GST) வாயிலாக கிடைத்துள்ளது. இது கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகமாகும்.
ஜி.எஸ்.டி வருவாய் குறித்த தகவல்கள் ஞாயிற்றுக்கிழமை (செப்.1) வெளியாகின. இதில் இந்தத் தகவல்கள் கூறப்பட்டுள்ளன.
2023 ஆகஸ்ட் மாதத்தில் 1.59 லட்சம் கோடி வருவாய் கிடைத்தது. இந்த நிலையில், 2024 ஜூலை மாத்தில் 1.82 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.
மேலும், ஆகஸ்ட் 2024 இல் உள்நாட்டு ஜிஎஸ்டி வருவாய் 9.2% அதிகரித்து சுமார் ரூ.1.25 லட்சம் கோடியாக இருந்தது. பொருட்களின் இறக்குமதியின் வருவாய் 12.1% அதிகரித்து ரூ.49,976 கோடியாக உள்ளது.
இதையும் படிங்க : ரூ.5 முதல் ரூ.150 வரை.. தமிழ்நாட்டில் 25 டோல் கேட்களில் கட்டண உயர்வு!
இது, கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 38% அதிகமாகும், இந்த மாதத்தில் வழங்கப்பட்ட ரீஃபண்டுகள் மொத்தம் ரூ.24,460 கோடியாக உள்ளது.
மேலும், ரீஃபண்டுகளைக் கணக்கிட்ட பிறகு, நிகர ஜிஎஸ்டி வருவாய் 6.5% அதிகரித்து, மாதத்திற்கு ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com