World Seafood Conference in Chennai : உலக கடல் உணவு மாநாடு, 2026 பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
World Seafood Conference in Chennai : உலக கடல் உணவு மாநாடு, 2026 பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Published on: September 27, 2025 at 9:28 pm
Updated on: September 28, 2025 at 12:15 am
புதுடெல்லி, செப்.27, 2025: கனடா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, மொராக்கோ, அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் 1999 ல் இருந்து உலக கடல் உணவு மாநாடு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மாநாடு முதல்முறையாக இந்தியாவில் அதுவும் சென்னையில் நடத்தப்பட இருக்கிறது. இந்தியா உலக சந்தைகளுக்கு கடல் உணவுகளை வழங்கும் 6-வது பெரிய நாடு ஆகும்.
மேலும், மீன் உற்பத்தியில் 2-வது பெரிய நாடாகவும், ஏற்றுமதியில் சிறந்த நாடாகவும் திகழ்கிறது. அதிகரித்து வரும் ஏற்றுமதி தேவையை கருத்தில் கொண்டு இந்த கடல் உணவு மாநாடு சென்னையில் வருகிற 2026 பிப்ரவரி மாதம் 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடைபெற உள்ளது. மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம், ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசு சாரா நிறுவனமான சர்வதேச மீன் ஆய்வாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.
இதையும் படிங்க : நாடு முழுக்க கை, கால் தொற்று அதிகரிப்பு.. என்ன காரணம், பாதுகாப்பாக இருப்பது எப்படி?
மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகம், கொச்சியில் உள்ள கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், நிதி ஆயோக், இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் இந்திய கடல் பொருட்கள் சங்கம் ஆகியவை மாநாட்டை ஆதரிக்கின்றன. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் இதில் தொழில்நுட்ப பங்காளியாக உள்ளது.
இந்த மாநாடு பற்றி பி.டி.ஏ. வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் தலைவர் பிரதீப் தேவய்யா, “உலக கடல் உணவு மாநாட்டை முதன்முறையாக நடத்துவது இந்தியாவுக்கு மிகவும் பெருமை சேர்க்கும் விஷயம். இந்தியாவின் கடல் உணவுத் துறையை உலகிற்குக் காட்சிப்படுத்தவும், உலகளாவிய கூட்டாண்மைகளை ஈர்க்கவும், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் நிலையான நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கவும் இது ஒரு மைல்கல் வாய்ப்பாகும்” என்றார்.
இதையும் படிங்க : புகைப்பிடித்தலுக்கு சமமான காற்று மாறு.. எச்சரிக்கும் மருத்துவர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com