ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் வெஜ் கிரேவி ; இட்லி, தோசைக்கு செம்ம காம்பினேஷன்!

How to make veg gravy | இட்லி, தோசை, சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் சுவையான வெஜ் கிரேவி இப்படி பண்ணுங்க.

Published on: November 19, 2024 at 9:20 am

How to make veg gravy | ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் சுவையான வெஜ் கிரேவி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

காளான் – 250 கிராம்
சோயா – 100 கிராம்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் -2
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 டேபிள் ஸ்பூன்
தக்காளி -1
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் -1 டீஸ்பூன்
மல்லித்தூள் -1 டீஸ்பூன்
கரம் மசாலா -3/4 டீஸ்பூன்

அரைக்க வேண்டியவை

பெரிய வெங்காயம்-1
கொத்தமல்லி தண்டு – சிறிதளவு
முந்திரி – 4
சிறிய பச்சை மிளகாய் -1

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில் 4 முந்திரி, ஒரு பெரிய வெங்காயம், கொத்தமல்லி தண்டு மற்றும் ஒரு சிறிய பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் இரண்டு பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கி பொன்னிறமாக மாறிய பின்னர் இதனுடன் அரைத்த இஞ்சி பூண்டு விழுதுனை சேர்த்து வதக்க வேண்டும்.

விழுதின் பச்சை வாடை நீங்கிய பின்னர் இதனுடன் ஒரு தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். இவை நன்கு வதங்கிய பின்னர் இதனுடன் அரைத்த விழுதினை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை அடுப்பு தீயை லோ ஃபிலிமில் வைத்து வதக்க வேண்டும். பின்னர் இதனுடன் காளான் மற்றும் சோயா பீன்ஸ் சேர்த்து கிளறி விட வேண்டும். இதனுடன் சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.

இந்த கிரேவியில் உருளைக்கிழங்கு, பட்டாணி, காலிஃப்ளவர் போன்ற எந்த காய்கறி வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். அடுப்பு தீயை லோ பிளேமில் வைத்து பத்து நிமிடம் மூடி போட்டு வேக விட வேண்டும். இறுதியாக கொத்தமல்லி தலையை தூவி திறக்கவும். இப்போது சுவையான வெஜ் கிரேவி தயார். இது இட்லி, தோசை, சப்பாத்தி, நெய் சாதம் போன்ற அனைத்துடனும் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

இதையும் படிங்க : கல்யாண வீட்டு சுவையில் உருளைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

Recent Post

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com