Food: ரோட்டு கடை காளான் மசாலா வீட்டிலேயே சுவையாக எப்படி செய்யணும்னு தெரியுமா? இந்த வழிமுறைகளை ஃபாலோ பண்ணி வீட்டிலேயே செய்து அசத்துங்க.
Food: ரோட்டு கடை காளான் மசாலா வீட்டிலேயே சுவையாக எப்படி செய்யணும்னு தெரியுமா? இந்த வழிமுறைகளை ஃபாலோ பண்ணி வீட்டிலேயே செய்து அசத்துங்க.
Published on: May 6, 2025 at 12:57 pm
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ரோட்டு கடை காளான் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் -2
பெரிய வெங்காயம்- 3
இஞ்சி பூண்டு விழுது- 1 டீஸ்பூன்
கருவேப்பிலை -1 கொத்து
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
கரம் மசாலா -½ டீஸ்பூன்
தண்ணீர் – ¾ கப்
உப்பு – தேவையான அளவு
டோமேட்டோ சாஸ் -1 டீஸ்பூன்
சோயா சாஸ் -¼ டீஸ்பூன்
கான்பிளவர் மாவு -1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி அளவு
மாவு தயாரிக்க வேண்டியவை
முட்டைகோஸ் -1கப்
காளான் -½ கப்
மைதா மாவு -2½ டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு -1½ டேபிள்ஸ்பூன்
கான்பிளவர் மாவு -2 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் -1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
கரம் மசாலா -1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
ஒரு அகலமான பாத்திரத்தில் கழுவி சுத்தம் செய்த முட்டைக்கோசை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய காளானை சேர்க்கவும். பின்னர் இதனுடன் மைதா மாவு, அரிசி மாவு, கான்பிளவர் மாவு, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். இதில் தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிசைந்து கலந்து விடவும்.
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளவும். இந்த கலவையை 10 நிமிடம் மூடி போட்டு ஊற வைக்கவும். பின்னர் ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் தயார் செய்து வைத்த மாவினை சிறு சிறு துண்டுகளாக சேர்த்து பொரித்து எடுக்கவும். அடுப்புத்தீயை மீடியம் ஃப்ளேமில் வைத்து இரண்டு பக்கமும் நன்கு வேக வைத்து எடுக்கவும்.
இதையும் படிங்க: கேரட்டில் புட்டிங் கேக்.. சிம்பிளா இப்படி ட்ரை பண்ணுங்க..!
ஒரு கடாயில் எண்ணெய் செய்து எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் இதனுடன் இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, மிளகாய்த்தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.
இதை மூன்று நிமிடம் லோ ஃபிலிமில் மூடி போட்டு கொதிக்க விடவும். பின்னர் இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து டோமேட்டோ சாஸ் மற்றும் சோயா சாஸ் சேர்த்து கலந்து விடவும். பின்னர் ஒரு சிறிய கப்பில் ஒரு ஸ்பூன் கான்பிளவர் மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து இதை காளானுடன் சேர்த்து கலந்து விடவும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பரிமாறவும். இப்போது சுவையான ரோட்டு கடை காளான் தயார்.
இதையும் படிங்க: முக்கால் கிலோ மட்டன் போதும்.. சுட சுட சூப்பரான சுக்கா ரெடி.. இப்படி ட்ரை பண்ணுங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com