பள்ளிவாசல் நோன்பு கஞ்சி.. அதே சுவையில் வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்

Food: பள்ளிவாசலில் கிடைப்பது போல் நோன்பு கஞ்சி இப்படி ட்ரை பண்ணுங்க.

Published on: March 3, 2026 at 2:33 pm

சென்னை, மார்ச் 03, 2026: ரம்ஜான் நோன்பு காலங்களில் பள்ளிவாசலில் கிடைக்கும் அதே சுவையில் வீட்டிலேயே எப்படி நோன்பு கஞ்சி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி -½ கப்
துவரம் பருப்பு -½கப்
வெந்தயம் -1 டீஸ்பூன்
கடலை எண்ணெய் -2 ஸ்பூன்
பட்டை – 2 துண்டு
ஏலக்காய் -3
கிராம்பு -3
சின்ன வெங்காயம் -5
பெரிய வெங்காயம் – 1
கருவேப்பிலை – சிறிதளவு
தக்காளி – 1
பச்சை மிளகாய் -3
பூண்டு -6 பல்லு
மல்லி இலை – சிறிதளவு
புதினா இலை – சிறிதளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் -¼ டீஸ்பூன்
கேரட் -1
பீன்ஸ் -5

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, துவரம் பருப்பு மற்றும் வெந்தயத்தை இரண்டு மூன்று முறை கழுவி சுத்தம் செய்து 20 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து வறுக்கவும். பின்னார் இதனுடன் சின்ன வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக மாறிய பின்னர் இதனுடன் கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி மசிந்த பின்னர் இதனுடன் பச்சை மிளகாய், பூண்டு, மல்லி இலை, புதினா இலை மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டின் பச்சை வாடை நீங்கிய பின்னர் இதனுடன் ஊற வைத்த பச்சரிசி பருப்பு கலவையை சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் இதனுடன் ஆறு கப் தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்க்கவும். பின்னர் இதனுடன் பொடியாக நறுக்கிய கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்து குக்கரை மூடி போட்டு ஹை ஃபிளேமில் மூன்று விசில் வைத்து இறக்கவும். குக்கரின் ஆவி முழுவதுமாக வெளியேறிய பின்னர் இதனுடன் இரண்டு கப் தேங்காய் பால் மற்றும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பு தீயை ஆஃப் செய்யவும். இறுதியாக உப்பு சரி பார்த்துக் கொள்ளவும். இப்போது சுவையான ரம்ஜான் நோன்பு கஞ்சி பள்ளிவாசலில் கிடைப்பது போல் வீட்டிலேயே தயார்.

இதையும் படிங்க: ரெஸ்டாரென்ட் சுவையில் வீட்டிலேயே மஸ்ரூம் டிக்கா மசாலா.. ஈஸி ஸ்டெப்ஸ்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com