Food | மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு பிடித்த உருளைக் கிழங்கு ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
February 6, 2025
Food | மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு பிடித்த உருளைக் கிழங்கு ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
Published on: September 21, 2024 at 9:11 pm
Food | வீட்டில் உள்ள பொருட்களை வைத்து மிகவும் எளிமையாக இரண்டே நிமிடத்தில் செய்யக்கூடிய குழந்தைகளுக்குப் பிடித்த ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெசிபி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 3
ரவை – 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் -2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் -1
மல்லி இலை – சிறிதளவு
சீரகம் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் மூன்று உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வேகவைத்த உருளைக்கிழங்கினை காய்கறி துருவலில் பூப்போன்று துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் ரவை, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய மல்லி இலை, சீரகம், கரம் மசாலா மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.
இந்த கலவையுடன் தண்ணீர் சேர்க்காமல் சப்பாத்தி மாவு பதத்தில் நன்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த மாவினை சிறு சிறு துண்டுகளாக எடுத்து கட்லெட் வடிவிலோ அல்லது விரல் வடிவிலோ தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அடுப்புத்தீயை மீடியம் ஃப்ளேமில் வைத்து தட்டி எடுத்த மாவினை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இவை பொன்னிறமாக சிவந்து வந்ததும் எண்ணெயிலிருந்து எடுத்து வேறு பாத்திரத்தில் மாற்றவும். இப்போது குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் தயார். இதை டோமட்டோ கெட்சப் உடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
இதையும் படிங்க : குழந்தைகள் விரும்பி சாப்பிடும்; டிபன் பாக்ஸ் கம்ஃபார்ம் காலி: மொறுமொறு பிரட் பக்கோடா இப்படி பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com