வீட்டிலேயே ரெடி பண்ணலாம் பானி பூரி; அட ரொம்ப ஈஸி.. இப்படி செஞ்சு பாருங்க!

Food: பெரும்பாலான மக்கள் விருந்து சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று பானி பூரி. இந்த சிறிய பூமியில் உருளைக்கிழங்கு மசாலா மட்டும் ரசம் போன்ற கலவையை சேர்த்து சாப்பிடும் பொழுது சுவையாக இருக்கும். இதை எளிமையான முறையில் வீட்டிலே இப்படி செய்து அசத்துங்க.

Published on: May 17, 2025 at 3:24 pm

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பானிபூரி வீட்டிலேயே சுவையாக எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

எண்ணெய் – தேவையான அளவு
பானிபூரி -1 பாக்கெட்

மசாலா தயாரிக்க

உருளைக்கிழங்கு -3
பெரிய வெங்காயம் -1
கொத்தமல்லி இலை-1 ஒரு கைப்பிடி அளவு
உப்பு -1 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் -1 டீஸ்பூன்
சாட் மசாலா – ½ டீஸ்பூன்
பச்சை மிளகாய் -2
சீரகத்தூள் -1 டீஸ்பூன்

பானி தயாரிக்க

கொத்தமல்லி இலை -1 கைப்பிடி அளவு
புதினா இலை -1 கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் -3
புளி – சிறிதளவு
இஞ்சி -1 துண்டு
உப்பு -1 டீஸ்பூன்
மிளகாய் தூள் -1 டீஸ்பூன்

செய்முறை

ஒரு குக்கரில் உருளைக்கிழங்கை அவித்து எடுத்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கின் தோலை நீக்கி நன்கு மசித்து கொள்ளவும். பின்னர் இதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் நறுக்கிய கொத்தமல்லி இலை, மிளகாய் தூள், சாட் மசாலா, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து எடுத்துக் கொள்ளவும்.

இதையும் படிங்க: ஹோட்டல் ஸ்டைலில் வெஜ் மஞ்சூரியன்.. இப்படி செய்து அசத்துங்க!

இப்போது உருளைக்கிழங்கு மசாலா தயார். பானி தயாரிக்க சுத்தம் செய்த ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை, ஒரு கைப்பிடி அளவு புதினா இலைகளை, பச்சை மிளகாய், இஞ்சி, புளி, மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். பின்னர் இந்த விழுதுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பானி தயாரித்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அடுப்புத்தீயை ஹை ஃப்ளேமில் வைத்து பானிபூரிகளை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும். பூரி தயாரானதும் பூரியின் நடுவில் சிறிது உடைத்து விட்டு நடுவில் தயார் செய்து வைத்த பூரி மசாலாவை வைத்து நிரப்பவும் இதனுடன் தயார் செய்து வைத்த பானியும் சேர்த்து பரிமாறவும்.

இதையும் படிங்க: உங்க பசங்க ஸ்கூல் போறாங்களா.. வெஜிடபிள் புலாவ் இப்படி ரெடி பண்ணுங்க..!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com