அரை கிலோ மட்டனில் செட்டிநாட்டு ஆட்டுக்கறி!

How to make mutton curry | காரசாரமான செட்டிநாடு மட்டன் கிரேவி ஹோட்டல் சுவையில் இப்படி செஞ்சு அசத்துங்க.

Published on: October 20, 2024 at 12:08 pm

How to make mutton curry | புதிதாக சமையல் செய்ய பழகுபவர்கள் கூட எளிதாக செய்யக்கூடிய சுவையான செட்டிநாட்டு மட்டன் கிரேவி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

மட்டன் – 1/2 கிலோ
தேங்காய் எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
பிரிஞ்சி இலை -1
பட்டை – 1
சோம்பு – 1/4 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2
உப்பு -தேவையான அளவு
கருவேப்பிலை – சிறிதளவு
மல்லி இலை – சிறிதளவு
மிளகாய் தூள் – 1 டேபிள்ஸ்பூன்
மல்லி தூள் – 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 1
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

அரைக்க வேண்டியவை

தேங்காய் – 3 துண்டுகள்
சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி – 2 சிறிய துண்டுகள்
பூண்டு – 8 பல்லு
மிளகு – 1 டீஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
ஏலக்காய் -2
பட்டை – 2
சீரகம் – 1 டீஸ்பூன் சோம்பு – 1/2 டீஸ்பூன்
புதினா இலை – சிறிதளவு

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகு, கசகசா, ஏலக்காய், பட்டை, சீரகம், சோம்பு மற்றும் புதினா இலையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


பின்னர் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் இதனுடன் பிரிஞ்சி இலை பட்டை, சோம்பு, பெரிய வெங்காயம் கருவேப்பிலை மல்லி இலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக மாறி நன்கு வதங்கிய பின்னர் இதனுடன் அரைத்து வைத்த மசாலா விழுதினை சேர்க்க வேண்டும்.

பின்னர் இதனுடன் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் தக்காளி சேர்த்து மசாலா பேஸ்டின் பச்சை வாடை நீங்கும் வரை நன்கு வதக்க வேண்டும். பின்னர் இதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட வேண்டும். மசாலா பேஸ்ட் நன்கு வதங்கி நிறம் மாறியதும் இதனுடன் சுத்தம் செய்து எடுத்து வைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

மசாலா பேஸ்ட் மட்டனில் நன்கு ஒட்டும் அளவிற்கு இரண்டு நிமிடம் நன்கு வதக்க வேண்டும். பின்னர் இதனுடன் மட்டன் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் 5 முதல் 7 விசில் வைக்க வேண்டும். குழம்பு பதத்தில் வேண்டும் என்றால் கூடுதல் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். குக்கரில் ஆவி முற்றிலும் வெளியேறிய பின்னர் குக்கர் மூடியை திறந்து மட்டன் நன்கு வெந்துள்ளதா என்று செக் செய்யவும்.

மட்டன் வேக வில்லை என்றால் மேலும் மூன்று விசில் வைக்கவும். இப்போது மட்டன் நன்கு வெந்து தயாராகி இருக்கும். பார்க்கவே அருமையான சுவையான செட்டிநாட்டு மட்டன் கிரேவி தயார். இதை சுடு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, புலாவ், தேங்காய்ப்பால் சாதம் போன்ற அனைத்திற்கும் பக்காவான சைடிஸ் ஆக இருக்கும்.

இதையும் படிங்க : இதோ ஏழே நிமிடத்தில் லெக் பீஸ் ரெடி: செஃப் தாமு ஸ்டைலில் இப்படி பண்ணுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com