Food: ரெஸ்டாரன்ட் சுவையில் முட்டை சில்லி வீட்டிலேயே எளிமையாக இப்படி பண்ணுங்க.
Food: ரெஸ்டாரன்ட் சுவையில் முட்டை சில்லி வீட்டிலேயே எளிமையாக இப்படி பண்ணுங்க.

Published on: March 2, 2026 at 2:17 pm
சென்னை, மார்ச் 2, 2026: குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய முட்டை சில்லி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முட்டை -4
சோள மாவு -¼ கப்
மைதா மாவு -¼ கப்
மிளகாய் தூள் -1 டீஸ்பூன்
மிளகு தூள் -¼ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
இஞ்சி – சிறிதளவு
பூண்டு -5 பல்லு
கடுகு -1 டீஸ்பூன்
மிளகாய் -4
வரமிளகாய் -2
கருவேப்பிலை -1 கொத்து
பெரிய வெங்காயம் -3
சீரகத்தூள் -½ டீ ஸ்பூன்
கரம் மசாலா -¼ டீஸ்பூன்
மிளகாய் தூள் -1 டீஸ்பூன்
தக்காளி -1
குடைமிளகாய் -1
எலுமிச்சை சாறு -1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியே பிரித்து எடுக்க வேண்டும். ஒரு சில்வர் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் தடவி அதில் முட்டையின் வெள்ளை கருவினை சேர்த்து பாத்திரத்தை மூடி கொதிக்கும் நீரில் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். முட்டை வெந்த பின்னர் வேறு பார்த்துரத்தில் மாற்றி சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் கான்பிளவர், மைதா மாவு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மாவு போன்ற கலவை தயார் செய்யவும். பின்னார் இதனுடன் முட்டை துண்டுகளை சேர்த்து கலந்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் முட்டை துண்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து பொரித்து எடுக்கவும்.
இதையும் படிங்க: இனி கடைக்கு போய் வாங்க வேண்டாம்,. குழந்தைகள் விரும்பும் ரோஸ் மில்க் கேக்.. வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்!
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பூண்டு, மிளகாய், வர மிளகாய் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து கலந்து விடவும். இவை பொறிந்ததும் இதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து கலந்து விடவும். வெங்காயம் பொன்னிறமாக மானிய உடன் இதனுடன் சீரகத்தூள், கரம் மசாலா மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து விடவும்.
மசாலாவின் பச்சை வாடை நீங்கிய பின்னர் இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து கலந்து விடவும். தக்காளி மசிந்ததும் இதனுடன் பொடியாக நறுக்கிய குடை மிளகாய் சேர்க்கவும். சாஸ் சேர்க்க வேண்டும் என்று விரும்பினால் இந்த சமயம் ஒரு டீஸ்பூன் சில்லி சாஸ் மற்றும் ஒரு டீ ஸ்பூன் டோமேட்டோ கெட்சப் சேர்க்கலாம். இதனுடன் பொறித்து வைத்த முட்டை துண்டுகளை சேர்த்து கலந்து விடவும். பின்னர் இதனுடன் சிறிது எலுமிச்சைச் சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். இப்போது சுவையான முட்டை சில்லி தயார்.
இதையும் படிங்க: வீட்டிலேயே ரெடி பண்ணலாம் பானி பூரி; அட ரொம்ப ஈஸி.. இப்படி செஞ்சு பாருங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com