Tomato rice | பிரபல சமையல் கலைஞர் தாமு ஸ்டைலில் தக்காளி சாதம் செய்வது எப்படி என்பது தெரியுமா?
Tomato rice | பிரபல சமையல் கலைஞர் தாமு ஸ்டைலில் தக்காளி சாதம் செய்வது எப்படி என்பது தெரியுமா?
Published on: August 31, 2024 at 6:02 am
Tomato rice | சிம்பிளான, ஆரோக்கியமான மற்றும் பாரம்பரியமான தக்காளி சாதத்தை பிரபல சமையல் கலைஞர் தாமு ஸ்டைலில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
வடித்த சாதம் -ஒரு கப்
தக்காளி- 4
வெங்காயம் -2
பூண்டு -4 பல்லு
இஞ்சி – சிறிய துண்டு
மிளகாய் தூள் -2 டீஸ்பூன்
தனியாத்தூள்- 3 டீஸ்பூன்
மஞ்சத்தூள்- 1/2டீஸ்பூன்
மிளகுத்தூள்-1 டீஸ்பூன்
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு
தாளிக்க:
கடுகு
வர மிளகாய்
கருவேப்பிலை
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பின் கடுகு, வரமிளகாய், எண்ணெய் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் இதனுடன் சிறிதாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டினை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் இதனுடன் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் இதனுடன் சிறிதாக நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்து தொக்கு பதத்தில் வரும் வரை நன்கு வதக்கவும்.
பின்னர் இதனுடன் காரத்துக்கு ஏற்ப மிளகாய் தூள், தனியா தூள் மஞ்சள் தூள், மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து தொக்கு பதத்திற்கு வரும் வரை நன்கு வதக்கவும். மேலும், சிறிது கொத்தமல்லி இலை மற்றும் வடித்த சாதத்தை சேர்த்து கிளறி விடவும்.
இப்போது பிரபல சமையல் கலைஞர் தாமு ஸ்டைலில் சுவையான தக்காளி சாதம் ரெடி
இதையும் படிங்க ரூ.50க்கு ‘பட்டர் நான் தாலி’: வொர்த்தான வீடியோவுடன் வந்த ஆனந்த் மகிந்திரா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com