lifestyle | Youthful Glow | இளமையான முகப்பொலிவுக்கு இது தேவை என டாக்டர் ஆஷா லெனின் கூறியுள்ளார்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
lifestyle | Youthful Glow | இளமையான முகப்பொலிவுக்கு இது தேவை என டாக்டர் ஆஷா லெனின் கூறியுள்ளார்.
Published on: September 13, 2024 at 7:04 pm
Updated on: September 13, 2024 at 9:21 pm
Lifestyle | Youthful Glow |அனைவரும் தங்களின் முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ளவே விரும்புகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்கள் இதில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வார்கள். திருவிழா உள்ளிட்ட காலங்களில் இதற்காகவே பெண்கள் பல மணி நேரத்தை செலவிடுவார்கள்.
இருப்பினும் கூட சில நேரங்களில் அவர்களுக்கு தேவையான முகப்பொலிவு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிகிறதோ என அச்சம் கொள்வார்கள். இதனை தவிர்க்கும் விதமாக நாம் தற்போது ஒன்றை பார்க்கலாம்.நமது முகத்தை எப்போதும் பொலிவாக வைத்துக்கொள்ள டாக்டர் ஆஷா லெனின் அறிவுரை வழங்கியுள்ளார்.
பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகளின் முகம் பொலிவுற்று நல்ல நிறமாக மாறுவதற்கு விரலி மஞ்சள், வசம்பு, உளுந்தம் பருப்பு, பச்சைப்பயிறு, பாதாம் மற்றும் பார்லி அரிசி இவை அனைத்தையும் சம அளவு எடுத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆண் குழந்தைகளுக்கு அரைக்கும் பொழுது விரலி மஞ்சளை மட்டும் நீக்கிவிட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவுடன் பச்சை பால் அல்லது தண்ணீர் சேர்த்து கலந்து உடம்பு முழுவதும் தேய்த்து குளித்து வர குழந்தையின் நிறம் அதிகரிக்கும். மேலும் இதை பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகளின் கழுத்து, கை, கால் மூட்டு பகுதிகளில் ஏற்பட்டுள்ள கருப்புகள் மறைகிறது.
மேலும் இது தோல் அலர்ஜி, சொறி, சிரங்கு போன்ற வியாதிகள் வராமல் தடுக்கிறது. தோலினை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைக்கிறது. இந்த தகவலை பிரபல டாக்டர். ஆஷாலெனின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தலைமுடி கருகருவென வளரும்.. கற்றாழை vs நெல்லிக்காய்: எது பெஸ்ட் தீர்வு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com