Effects of using mobile phones in the bathroom: பாத்ரூமில் மொபைல் போன் யூஸ் பண்ணும் நபர்களுக்கு மூலநோய் பாதிக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர் எச்சரித்துள்ளார்.
Effects of using mobile phones in the bathroom: பாத்ரூமில் மொபைல் போன் யூஸ் பண்ணும் நபர்களுக்கு மூலநோய் பாதிக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர் எச்சரித்துள்ளார்.
Published on: April 20, 2025 at 5:06 pm
புதுடெல்லி ஏப்ரல் 2025: பாத்ரூமில் முடிந்தளவு மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என மருத்துவர் எச்சரித்துள்ளார். பிரபல மயக்கவியல் மருத்துவரான குணால் சூட் இன்று (ஏப்ரல் 2025) இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், பாத்ரூமில் இருக்கும் போது தொலைபேசியை ஸ்க்ரோல் செய்யும் நபர்களுக்கு மூலநோய் பாதிப்பு ஏற்படலாம் என எச்சரித்துள்ளார். மேலும் இந்த மூலநோய் பாதிப்பில் இருந்து எவ்வாறு விடுபடலாம் என்பது குறித்தும் மருத்துவர் குணால் சூட் பகிர்ந்துள்ளார். அதில் நோயாளி ஒருவர், அதிக நேரம் பாத்ரூமில் மொபைல் போன் பயன்படுத்துவதாக தெரிவித்திருந்தார்.
அவருக்கு சில பாதிப்புகள் இருந்தன. பொதுவாக பாத்ரூமில் அதிக அளவு மொபைல் போன் பயன்படுத்தும் நபர்களுக்கு மலக்குடல் நரம்புகளில் நீடித்த அழுத்தம் ஏற்படும்; இந்த அழுத்தம் காரணமாக அவர்களுக்கு மூலநோய் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. அதாவது பாத்ரூமில் மொபைல் போன் பயன்படுத்தும் நபர்களுக்கு மூல நோய் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இது பற்றி மருத்துவர் இன்ஸ்டாகிராம் பதிவில் மேலும் சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதில் மலச்சிக்கல் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் மருத்துவர் நம்மிடையே சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அதன்படி மலச்சிக்கல் இருந்தால் முடிந்தவரை உணவு மாற்றங்களை நாம் மேற்கொள்ள வேண்டும்; முடிந்தவரை கழிவறையில் ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு மேல் செலவிடக்கூடாது.
நார்ச்சத்து மற்றும் நீர் ஏற்றம் தொடர்பான உணவுப் பொருட்களை நாம் உட்கொள்ள வேண்டும். இது மலச்சிக்கலை தடுக்கவும் குடல் பாதிப்புகளை குறைக்கவும் உதவும். மேலும் மலச்சிக்கலை குணப்படுத்த அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.
மூலநோய் என்றால் என்ன?
மூலநோய் அல்லது பைல்ஸ் எனப்படுவது ஆசனவாய் மற்றும் கீழ் மலக்குடலில் வீங்கிய நரம்புகள் மூலம் ஏற்படும் ஒரு பிரச்சனை ஆகும். இது வெரிகோஸ் வெயின்களை போன்றது. மேலும் மூல நோய் மலக்குடலுக்குள் உருவாக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அவ்வாறு உருவாகும் நோய் உள் மூலநோய் என அழைக்கப்படுகிறது. இது ஆசன வாயை சுற்றியுள்ள தோளில் உருவாகலாம். அவ்வாறு உருவாகும் மூலநோய் வெளிப்புற மூல நோய் எனப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அக்ஷய திருதியை 2025: எந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம்? தேதி செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com