Venkatesh Bhat style Ilanaer Payasam |பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் இளநீர் பாயாசம் எப்படி செய்வது என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
Venkatesh Bhat style Ilanaer Payasam |பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் இளநீர் பாயாசம் எப்படி செய்வது என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
Published on: September 10, 2024 at 9:58 am
Venkatesh Bhat style Ilanaer Payasam | நாவில் ருசியை தூண்டக்கூடிய மற்றும் உணவுக்குப் பின் உண்ணக்கூடிய ஒரு ஸ்பெஷலான இளநீர் பாயாசம் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் எப்படி செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
பால் – 1/2 லிட்டர்
சர்க்கரை – 100 கிராம்
மில்க் மேடு – 3 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி- 1 சிட்டிகை
இளநீர் வழுக்கை- 4
தேங்காய் பால்
செய்முறை
முதலில் இளநீர் வழுக்கையின் மெல்லிய பகுதிகளை சுத்தம் செய்து பொடி பொடி துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் அரை லிட்டர் பாலை ஊற்றி, 15 நிமிடம் பாலினை நன்கு கிளறி கட்டிப்பதம் வரும் வரை கொதிக்க விட வேண்டும். பதம் வந்ததும் இதனுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின்னர் இது பால்கோவா பதத்திற்கு வந்ததும் தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் மில்க் மேடு மற்றும் ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
இதனுடன் கட்டி தேங்காய் பால் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின்னர் இந்த கலவையினை ஒரு வடிகட்டி மூலம் வடிகட்டி அதனை பொடி துண்டுகளாக நறுக்கி வைத்த இளநீர் வழுக்கையுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதனை நன்கு கிளறி விட வேண்டும். இந்த தருணத்தில் இனிப்பினை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இனிப்பு குறைவாக இருந்தால் அதனுடன் தேவைக்கேற்ப மில்க் மேட் சேர்த்துக்கொண்டு நன்கு கிளறி விட வேண்டும்.
இப்போது வெங்கடேஷ் பட் ஸ்டைலில் அமுதிற்கு நிகரான சுவையினை தரக்கூடிய இளநீர் பாயாசம் தயார்.
இதையும் படிங்க: ஓணம் ஸ்பெஷல்; சாம்பாருடன் சாப்பிட்டால் ருசி அள்ளும்: கேரள ஸ்டைலில் அவியல் செய்வது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com