தித்திக்கும் சித்திரை தமிழ் புத்தாண்டு 2025: உங்க நண்பர்களுக்கு இப்படி வாழ்த்து அனுப்புங்க..!

2025 Tamil New Year: 2025 தமிழ் புத்தாண்டு ஏப்.14ஆம் தேதி (சித்திரை 1) கொண்டாடப்பட உள்ளது. இந்த புத்தாண்டில் கனி காணுதல் முக்கிய நிகழ்வாக உள்ளது.

Published on: April 13, 2025 at 11:28 pm

Updated on: April 14, 2025 at 12:46 am

தமிழ்நாட்டில் புதுவருஷம் அல்லது வருடப் பிறப்பு என்று அழைக்கப்படும் தமிழ் புத்தாண்டு அழைக்கப்படுகிறது. ஏப்ரல் 14, 2025 அன்று கொண்டாடப்படும் இந்த விழா, தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

அந்த வகையில், இந்த ஆண்டு (2025) தமிழ் புத்தாண்டு திங்கட்கிழமை வருகிறது. சூரியன் பூமத்திய ரேகைக்கு நேர் மேலே இருக்கும் நாளைக் குறிக்கும் வகையில், இந்த விழா சூரிய நாட்காட்டியுடன் ஒத்துப்போகிறது.

இந்த நாள் சம இரவு என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது, சூரியன் இரண்டு அரைக்கோளங்களின் நடுவிலும் இருக்கும்போது தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த சமநிலைப் புள்ளி ஆண்டின் சிறந்த தொடக்கமாகக் கருதப்படுகிறது. இது வாழ்க்கையில் சமநிலையையும் இயற்கையுடனான இணக்கத்தையும் குறிக்கிறது. மேலும், இந்த சமநிலை அமைதியையும் செழிப்பையும் தருகிறது என்பதும் ஐதீகம்.

கனி காணுதல்

தமிழ் புத்தாண்டு மற்றும் மலையாள புத்தாண்டு பெரும்பாலும் ஒரே தினத்தில் நிகழ்கின்றன. அன்றைய தினம், முக்கனிகளான மா, வாழை மற்றும் பலா பழங்களை ஒரு தட்டில் வைத்து பூஜித்து, கண்ணாடியில் கனி காணுவார்கள்.
இது மிகவும் பிரசித்தமாகும். மேலும், வரவிருக்கும் ஆண்டு வளமாக இருக்க ஆசீர்வாதம் பெற பலர் கோயில்களுக்குச் செல்கிறார்கள்.

புத்தாண்டு உணவு

தமிழர்கள் புத்தாண்டு உணவாக பச்சரிசி பாயாசம், அவியல் கூட்டுடன் சாம்பார் மற்றும் மாங்காய் ஊறுகாய் உடன் உணவை எடுத்துக் கொள்வார்கள்.

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

  • இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.! இந்த ஆண்டு வெற்றிகளால் நிறைந்ததாக அமையட்டும்.
  • இந்த புத்தாண்டு உங்களுக்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும்.
  • இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.! உங்கள் வாழ்க்கை அன்பு மற்றும் மகிழ்ச்சியால் நிறைந்ததாக இருக்கட்டும்.
  • இந்த சித்திரை தமிழ் புத்தாண்டு உங்களுக்கு ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் தரட்டும்.
  • இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.! உங்கள் இதயம் மகிழ்ச்சியால் நிரம்பி வழியட்டும்.

இதையும் படிங்க : ஆரஞ்சு ஜூஸ் இருந்தால் போதும்.. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மிட்டாய் ரெடி..!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் சுடர்விட்ட கார்த்திகை தீபம்.. “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா“ என பக்தர்கள் பரவசம்!
Thiruparankundram Deepam

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் சுடர்விட்ட கார்த்திகை தீபம்.. “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா“ என

என்எல்சியில் 143 பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர் பணியிடங்கள்: கேட் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு!
NLC Graduate Trainee Recruitment 2026

என்எல்சியில் 143 பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர் பணியிடங்கள்: கேட் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com