TNPC Group 4: குரூப்4 காலியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
TNPC Group 4: குரூப்4 காலியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published on: September 27, 2025 at 5:30 pm
சென்னை, செப்.27, 2025: தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் குரூப்4 தேர்வு காலியிடங்களை அதிகரித்துள்ளது. அதன்படி,0 2025 ஜூலை மாதம் நடந்த குரூப்-4 தேர்வில் கூடுதலாக 727 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதனால், மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தற்போது 4 ஆயிரத்து 662 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை அறிக்கை மூலமாக டி.என்.பி.எஸ்.சி உறுதிப்படுத்தியுள்ளது. குரூப்-4 தேர்வு, கடந்த ஜூலை 12 ஆம் தேதி நடந்தது. தமிழ்நாடு முழுவதிலும் 4,922 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வுக்கு 13 லட்சத்து 89 ஆயிரத்து 238 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து இருந்தார்.
எனினும், 11 லட்சத்து 48 ஆயிரத்து 19 விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வினை எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான முக்கிய தகவல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com