RRB RPF SI Result 2025: ஆர்.ஆர்.பி ஆர்.பி.எஃப் காவல் உதவி ஆய்வாளர் தேர்வு முடிவுகள் 2025 மதிப்பெண் அட்டை வெளியாகி உள்ளது. இதை எப்படி டவுன்லோடு செய்வது தெரியுமா?
RRB RPF SI Result 2025: ஆர்.ஆர்.பி ஆர்.பி.எஃப் காவல் உதவி ஆய்வாளர் தேர்வு முடிவுகள் 2025 மதிப்பெண் அட்டை வெளியாகி உள்ளது. இதை எப்படி டவுன்லோடு செய்வது தெரியுமா?
Published on: March 8, 2025 at 1:00 pm
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்.ஆர்.பி) ஆர்.பி.எஃப் காவல் உதவி ஆய்வாளர் தேர்வு முடிவு 2025 மதிப்பெண் அட்டையை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், விண்ணப்பதாரர்கள் பிராந்திய ஆர்.ஆர்.பி-களின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மூலம் மதிப்பெண் அட்டையை சரிபார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி பதிவிறக்கம் செய்வது?
பிராந்திய ஆர்.ஆர்.பி-களின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
முகப்புப் பக்கத்தில் கிடைக்கும் ஆர்.ஆர்.பி ஆர்.பி.எஃப் எஸ்.ஐ முடிவு 2025 மதிப்பெண் அட்டை இணைப்பைக் கிளிக் செய்யவும்.
விண்ணப்பதாரர்கள் உள்நுழைவு விவரங்களை உள்ளிட வேண்டிய ஒரு புதிய பக்கம் திறக்கும்.
அதில், சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும், உங்கள் மதிப்பெண் அட்டை காட்டப்படும்.
தொடர்ந்து, மதிப்பெண் அட்டையைச் சரிபார்த்து பக்கத்தைப் பதிவிறக்கவும். அதை பிரிண்ட் அவுட் நகல் எடுத்துக் கொள்ளலாம்.
ஆர்.ஆர்.பி தேர்வு விவரம்
ஆர்.ஆர்.பி கணினி அடிப்படையிலான தேர்வு டிசம்பர் 2 முதல் டிசம்பர் 13, 2024 வரை நடைபெற்றது. தற்காலிக விடைக்குறிப்பு டிசம்பர் 17 அன்று வெளியிடப்பட்டது. இதில், ஆட்சேபனை சாளரம் டிசம்பர் 22, 2024 அன்று மூடப்பட்டது.
452 சப் இன்ஸ்பெக்டர் பணி
ஆர்.ஆர்.பி மூலம் 452 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நிதி ஆயோக் இன்டென்ஷிப்.. மாணவர்கள் எப்படி விண்ணப்பிப்பது?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com