பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியில் 218 சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
February 6, 2025
பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியில் 218 சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Published on: September 4, 2024 at 9:57 pm
Punjab and Sind Bank Recruitment 2024 | பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி தற்போது ஆட்சேர்ப்பு பணிகளில் ஈடுபட்டுவருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தற்போது, சிறப்பு அதிகாரிகள் பதவிக்கு மொத்தம் 213 பணியிடங்களை நிரப்ப உள்ளது.
விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். punjabandsindbank.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் உள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
1) punjabandsindbank.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்
2) முகப்புப்பக்கத்தில், பயன்பாட்டு இணைப்பைப் பார்க்கவும்
3) தேவையான சான்றுகளைப் பயன்படுத்தி உள்நுழையவும்
4) விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்
5) தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்
6) விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்
7) படிவத்தை சமர்ப்பிக்கவும்
8) சேமித்து பதிவிறக்கி பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.
விண்ணப்ப கட்டணம்
பொது, EWS மற்றும் OBC பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 850 அகும். அதேபோல், எஸ்.சி (SC), எஸ்.டி (ST) மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ. 100 செலுத்த வேண்டும்.
கடைசி தேதி
விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15, 2024 ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் வங்கியின் தேவையைப் பொறுத்து, இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும்ப படிங்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 550 அப்ரண்டீஸ் பணி; எப்படி விண்ணப்பிப்பது?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com