IBPS PO Recruitment 2024 | ஐ.பி.பி.எஸ் வங்கி அதிகாரி பணிக்கு 4,455 காலி பணி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? கல்வி தகுதி என்ன என்பது குறித்து பார்க்கலாம். IBPS PO Recruitment 2024 | இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் (IBPS) இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளில் ப்ரோபேஷனரி அதிகாரி (PO) மற்றும் மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது.இந்தப் பணிக்கு மொத்தம் 4,455 காலியிடங்கள் உள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21 ஆகும். ஆட்சேர்ப்பில் பங்கேற்கும் வங்கிகள் வயது தகுதி விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 1, 2024 தேதியின்படி 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது ஆகஸ்ட் 2, 1994 மற்றும் ஆகஸ்ட் 1, 2004 (இரண்டு தேதிகளும் உட்பட) இடையே பிறந்திருக்க வேண்டும். கல்வித் தகுதி விண்ணப்பதாரர்கள் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பதிவு செய்வதற்கான கடைசி தேதியான ஆகஸ்ட் 21, 2024 முதல் பட்டம் செல்லும். ஆன்லைனில் பதிவு செய்யும் போது விண்ணப்பதாரர்கள் தங்கள் மதிப்பெண் பட்டியல் அல்லது பட்டப்படிப்பு சான்றிதழ்களை இணைக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் SC/ST/PwBD (பட்டியல்/ பழங்குடி/ மாற்றுத்திறனாளி) விண்ணப்பதாரர்கள் ரூ.175ம், மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ. 850ம் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை நாளை ஆகஸ்ட் 21, 2024க்குள் ஆன்லைனில் செலுத்த வேண்டும். விண்ணப்பிப்பது எப்படி? தேர்வு, முதல்கட்ட மற்றும் முதன்மை தேர்வின் அடிப்படையில் நடைபெறும். விரிவான மற்றும் மேலதிக விவரங்களுக்கு ipbs அதிகாரப்பூர்வ இணையத்தை பார்வையிடவும். செய்திகள் உடனுக்குடன் திராவிடன் டைம்ஸ் வாட்ஸ்அப் சேனலில் பெற https://whatsapp.com/channel/0029ValCwux002TB3u9SY20h