Yuvan Shankar Raja | 4 ஆண்டுகள் தோல்வி படங்களால் துவண்டு போய் இருந்துள்ளார் யுவன் சங்கர் ராஜா
Yuvan Shankar Raja | 4 ஆண்டுகள் தோல்வி படங்களால் துவண்டு போய் இருந்துள்ளார் யுவன் சங்கர் ராஜா
Published on: October 17, 2024 at 1:30 pm
Yuvan Shankar Raja | இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா. இவர் தனது கடந்த காலம் குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். அப்போது, கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் தோல்வி படங்களால் வாய்ப்பு இல்லாமல் இருந்தேன் எனக் கூறினார். தொடர்ந்த பேசிய யுவன், “4 ஆண்டுகள் படங்கள் சரியாக போகவில்லை.
இந்தத் தோல்வியால் புதிய படங்களின் வாய்ப்பும் கிடைக்கவில்லை. அப்போதுதான் அஜித் சார் என்னை மீட் பண்ணினார். நான் புதிதாக தீனா படம் பண்ணப் போகிறேன். அந்தப் படத்துக்கு நீ மியூசிக் பண்ணு. உன்னால முடிஞ்சா பெஸ்ட் ஆக பண்ணு என்றார். அந்தப் படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் கொடுத்தன.
அடுத்து, எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன” என்றார். யுவன் சங்கர் ராஜா, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். இவர் மேற்கத்திய இசையை மிக நுணுக்கமாக கையாள்வதில் கெட்டிக்காரர். அஜித் குமாருக்கு இவர் அமைத்த பிஜிஎம்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com