பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மரணம்.. சினிமா நட்சத்திரங்கள் இரங்கல்

Actress Sowcar Janaki Passes Away : பழம்பெரும் தமிழ் நடிகை சௌகார் ஜானகி, இன்று (ஆக.21, 2026) மரணம் அடைந்தார்.

Published on: August 21, 2026 at 5:43 pm

சென்னை, ஆக.21, 2026: சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூத்த நடிகை சௌகார் ஜானகி காலமானார். 94 வயதான அவர், முதுமை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) வைத்திருந்த நிலையில் உயிரிழந்தார். இந்தச் செய்தியை நடிகர் சங்கத் தலைவர் நாசர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆகஸ்ட் 21 அன்று மதியம் 1:59 மணிக்கு அவர் காலமானதாக நாசர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “புகழ்பெற்ற நட்சத்திரம் சௌகார் ஜானகி (94) காலமானார். அவரது உடல் இன்று மாலை 5 மணி முதல் தேனாம்பேட்டை, செனடாப் சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில், நடிகர் ‘கயல்’ தேவராஜ், சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார். அவர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார் என்றும், நடிகர் சங்க உறுப்பினர்கள் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாகவும் தெரிவித்தார்.

நாசர், சௌந்தரராஜா, ஹேமச்சந்திரன் உள்ளிட்ட தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு சென்று அவரைச் சந்தித்தனர். அவருடைய உடல்நிலை குறித்து அப்போது ரசிகர்களும், திரையுலகத்தினரும் கவலை தெரிவித்தனர்.

சௌகார் ஜானகியின் மறைவு, தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமா உலகிற்கு மிகப்பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது. பல தசாப்தங்களாக திரையுலகில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அவர், தனது கலைப்பயணத்தின் மூலம் என்றும் நினைவுகூரப்படுவார்.

இதையும் படிங்க : பாலியல், சிற்றின்ப காட்சிகள்.. யஷ்-ஷின் டாக்சிக் படத்துக்கு வெளிநாட்டில் சிக்கல்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com