‘தாழ்ப்பாள் இல்லாத தமிழ்; நாவில் இனிக்கும் காபி’: மு.க. ஸ்டாலினை சந்தித்தபின் வைரமுத்து ட்வீட்!

Vairamuthu met Stalin | தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பாடலாசிரியர் வைரமுத்து பேசியுள்ளார்.

Published on: October 3, 2024 at 11:35 am

Updated on: October 3, 2024 at 12:13 pm

Vairamuthu met M K Stalin | “முதலமைச்சர் வீட்டுக் காஃபியில் நுரைகளுக்கு மேல் தெளித்திருந்த டிகாஷன் இன்னும் நறுஞ்சுவையோடு நாக்கில் இருக்கிறது” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பின்னர் வைரமுத்து கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வைரமுத்து இன்று (அக்.3,2024) முகாம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குறித்து பாடலாசிரியர் வைரமுத்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில், ’25 நிமிடங்கள் உள்ளம் திறந்து உரையாடினோம்” எனக் கூறியுள்ளார்.

இது குறித்து வைரமுத்து,

முகாம் அலுவலகத்தில் மாண்புமிகு முதலமைச்சரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். அவரது அண்மைக்காலத் தொடர் வெற்றிகளுக்கு வாழ்த்துச் சொன்னேன். 25 நிமிடங்கள் உள்ளம் திறந்து உரையாடினோம். ஒரு நல்ல உரையாடல் என்பது நேர்த்தியான நெறிமுறைகள் கொண்டது. ஒரே மாதிரியான ஈடுபாடு இருவர்க்கும் வாய்க்க வேண்டும்.

அறையின் கதவுகள் பூட்டப்பட்டு இருதயத்தின் கதவுகள் திறந்திருக்க வேண்டும். ஒருவர் பேசிமுடித்து முற்றுப்புள்ளி வைக்கும் வரையில் அதை ஊடறுக்காத உரையாடல் நாகரிகம் வேண்டும். இந்த மூன்றும் உடையவர் முதலமைச்சர். அமெரிக்கா முதல் அப்பல்லோ வரையில் பிரதமர் முதல் துணைமுதல்வர் வரையில் அமைச்சரவை மாற்றம் முதல் அரசியல் விமர்சனம் வரையில்..

தாழ்ப்பாள் இல்லாத தமிழில் பல்வேறு எண்ணங்கள் பரிமாறிக்கொண்டோம். ஓர் ஆட்சியாளனுக்குரிய ஒரே ஒரு பெரும்பலம் ‘உற்சாகம்’. அந்த உற்சாகம் குறையாமல் உலா வாருங்கள் என்று வாழ்த்தி விடைகொண்டேன். முதலமைச்சர் வீட்டுக் காஃபியில் நுரைகளுக்கு மேல் தெளித்திருந்த டிகாஷன் இன்னும் நறுஞ்சுவையோடு நாக்கில் இருக்கிறது. நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

கில்லி VS துணிவு.. ரீ-ரிலீஸ் பாக்ஸ் ஆப்பில் யார் முன்னணி? Ghilli vs thunivu re release

கில்லி VS துணிவு.. ரீ-ரிலீஸ் பாக்ஸ் ஆப்பில் யார் முன்னணி?

Ghilli vs thunivu re release: விஜய்யின் கில்லி படத்துக்கும் அஜித்தின் துணிவு படத்துக்கும் இடையே ரீ-ரிலீஸ் பாக்ஸ் ஆபிஸ் மோதல் தமிழ் ரசிகர்களிடம் பரபரப்பான விஷயமாக…

47 ஆண்டுகளுக்கு பின் இணையும் ரஜினி- கமல்.. யார் ஹீரோ.. அனிருத் பதில் Anirudh Ravichander

47 ஆண்டுகளுக்கு பின் இணையும் ரஜினி- கமல்.. யார் ஹீரோ.. அனிருத் பதில்

Anirudh Ravichander: ரஜினிகாந்த்- கமல்ஹாசன் 47 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்து நடிக்கும் படத்தில் யார் ஹீரோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது….

தாய் கிழவி ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம்.. ராதிகா பரபரப்பு பேச்சு Actress Radhika

தாய் கிழவி ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம்.. ராதிகா பரபரப்பு பேச்சு

Actress Radhika: வயதான தோற்றத்தில் ராதிகா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் தாய் கிழவி….

இனி யாரையும்.. நாக சைதன்யா பிரிவு.. சமந்தா கடுமையான முடிவு! Samantha

இனி யாரையும்.. நாக சைதன்யா பிரிவு.. சமந்தா கடுமையான முடிவு!

Samantha: நாக சைதன்யாவுடன் பிரிவுக்குப் பிறகு, யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம் என்று நினைத்திருந்த நடிகை சமந்தா ரூத் பிரபு, இயக்குநர் ராஜ் நிடிமோருவின் அன்பும் நட்பும்…

மெட்ராஸ் படத்துக்கு மோசமாக விமர்சனம்.. சென்சார் குறித்து பா. ரஞ்சித் Director Pa Ranjith

மெட்ராஸ் படத்துக்கு மோசமாக விமர்சனம்.. சென்சார் குறித்து பா. ரஞ்சித்

Director Pa Ranjith: “என்னுடைய முதல் படத்திலிருந்து சென்சார் பிரச்னைகளைச் சந்தித்து வருகிறேன். ‘மெட்ராஸ்’ படத்தை மிக மோசமாக விமர்சித்தது சென்சார்தான்” என குற்றஞ்சாட்டியுள்ளார் இயக்குனர் பா….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com