சினிமா துறையில் அட்ஜெட்ஸ்மென்ட் கேட்கும் நபர்களை செருப்பால் அடியுங்கள் எனப் பேசிய நிலையில், நடிகை ஸ்ரீரெட்டி அதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசியுள்ளார்.
சினிமா துறையில் அட்ஜெட்ஸ்மென்ட் கேட்கும் நபர்களை செருப்பால் அடியுங்கள் எனப் பேசிய நிலையில், நடிகை ஸ்ரீரெட்டி அதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசியுள்ளார்.
Published on: August 29, 2024 at 7:56 pm
Updated on: August 29, 2024 at 7:57 pm
Sri Reddy | மலையாள சினிமா உலகில் பாலியல் குற்றச்சாட்டுகள் பூதாகரமாகியுள்ளன. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக இந்தக் குற்றச்சாட்டுகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
இந்த நிலையில் தமிழக திரையுலகில் அட்ஜெட்ஸ்மென்ட் இருக்கிறா? என்ற கேள்விக்கு நடிகர் விஷால் அதுபோன்று கேட்கும் நபர்களை செருப்பால் அடிக்க வேண்டும் எனப் பதிலளித்து இருந்தார்.
நடிகர் விஷாலின் இந்தப் பேட்டி வைரலான நிலையில் அதற்குப் பதிலளிக்கும் வகையில் ஸ்ரீரெட்டி ட்விட்டர் எக்ஸ் காட்டமான தாக்குதலை தொடுத்துள்ளார்.
பெயர் குறிப்பிட்டாமல் சம்பந்தப்பட்ட நபரை ஒருமுறையில் விமர்சித்துள்ள நடிகை ஸ்ரீரெட்டி, “என்னிடம் நிறைய செருப்புகள் உள்ளன. உங்களுக்கு வேண்டுமா? என்னிடம் தெரியப்படுத்துங்கள்” எனக் கூறியுள்ளார். கடந்த காலங்களில் நடிகர் விஷால் மீது ஸ்ரீரெட்டி பல்வேறு புகார்களை தெரிவித்து இருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com