Ramayana: ராமாயணம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் சீதையாக சாய் பல்லவி நடிக்கிறார்.
Ramayana: ராமாயணம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் சீதையாக சாய் பல்லவி நடிக்கிறார்.
Published on: April 16, 2025 at 6:03 pm
நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகிவரும், ராமாயணத்தில் சீதை வேடத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது ராவணால் சிறைப் பிடிக்கப்பட்ட சீதா கதாபாத்திரத்தில் படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் பகுதியில் சாய் பல்லவி மிக நேர்த்தியான அழகிய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் எனக் கூறப்படுகிறது. இந்தக் காட்சிகள் மிக நேர்த்தியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ராமாயணம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் தயாராகி வருகிறது. இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், முதல் பாகம் 2026 தீபாவளியிலும், இரண்டாவது பாகம் 2027 தீபாவளியிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாய் பல்லவி ஏற்கனவே தனது படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார், ஆனால் சன்னி தியோல் இன்னும் படப்பிடிப்பைத் தொடங்கவில்லை என்ற கூறப்படுகிறது.
இதையும் படிங்க : நடிகை மோனல் மரணம்: ஓடோடிய 23 ஆண்டுகள்.. தங்கையை நினைத்து சிம்ரன் உருக்கம்..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com