National Herald case: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் அகில இந்திய காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர்.
National Herald case: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் அகில இந்திய காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர்.
Published on: April 16, 2025 at 6:24 pm
புதுடெல்லி, ஏப்.16 2025: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து, காங்கிரஸ் தொண்டர்கள் புதன்கிழமை (ஏப்ரல் 16, 2025) அக்பர் சாலையில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேஷனல் ஹெரால்டு செய்தித்தாள் தொடர்பான பணமோசடி வழக்கில் ஏப்ரல் 9 ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக அமலாக்க இயக்குநரகம் செவ்வாய்க்கிழமை (ஏப்.15 2025) தெரிவித்துள்ளது. இந்தக் குற்றப் பத்திரிகையில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தவிர, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சாம் பிட்ரோடா மற்றும் சுமன் துபே ஆகியோரும் இணை குற்றவாளிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்றைய போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை விமர்சித்து, இது காந்தி குடும்பத்தையும் காங்கிரஸையும் குறிவைக்கும் முயற்சி என்று கூறினார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு, ₹2,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை கையகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு 2014 ஆம் ஆண்டு பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில் உருவானது.
மேலும் இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் இரண்டாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சோனியாவும் ராகுல் காந்தியும் தற்போது அதே வழக்கில் 2015 முதல் ஜாமீனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முர்ஷிதாபாத் திட்டமிட்ட வகுப்புவாத கலவரம்.. வங்கதேசத்தினருக்கு தொடர்பா? மம்தா பானர்ஜி பரபரப்பு பேச்சு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com