Ilaiyaraaj’s legal notice to Good Bad Ugly: இசையமைப்பாளர் இளையராஜா ₹5 கோடி இழப்பீடு கோரி சட்டப்பூர்வ அறிவிப்பை தாக்கல் செய்ததார். இந்நிலையில், அஜித் குமாரின் குட் பேட் அக்லி தயாரிப்பாளர்கள் தங்களுக்கு என்ஓசி இருப்பதாகக் கூறினர்.
Ilaiyaraaj’s legal notice to Good Bad Ugly: இசையமைப்பாளர் இளையராஜா ₹5 கோடி இழப்பீடு கோரி சட்டப்பூர்வ அறிவிப்பை தாக்கல் செய்ததார். இந்நிலையில், அஜித் குமாரின் குட் பேட் அக்லி தயாரிப்பாளர்கள் தங்களுக்கு என்ஓசி இருப்பதாகக் கூறினர்.
Published on: April 16, 2025 at 5:43 pm
சென்னை, ஏப்.16 2025: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அஜித், த்ரிஷா நடித்த குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில், அனுமதியின்றி தனது பாடல்களைப் பயன்படுத்தியதற்காக ₹5 கோடி இழப்பீடு கோரியுள்ளார். ஆனால் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு இசை லேபிள்களிடமிருந்து தடையில்லாச் சான்றிதழை (NOC) பெற்றதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் யலமஞ்சிலி ரவிசங்கர், “”படத்தில் நாங்கள் பயன்படுத்திய பாடல்களுக்குத் தேவையான அனைத்து இசை லேபிள்களிடமும் நாங்கள் அனுமதி பெற்றுள்ளோம். லேபிள்கள் உரிமைகளைக் கொண்டுள்ளன. நாங்கள் இதனை பயன்படுத்தி அவர்களிடம் தடையில்லா சான்றிதழ் பெற்றுள்ளோம்” என்றார்.
இதற்கிடையில் இளையராஜா தனது சட்ட நோட்டீஸில், இளையராஜா எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ₹5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தனது பாடல்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் இளையராஜா தெரிவித்துள்ளார். குட் பேட் அக்லி திரைப்படத்தில் ஒத்த ரூபாயும் தாரேன் என்ற பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
குட் பேட் அக்லி படம் ரூ.171.50 கோடி இதுவரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ஸ்மோக் வெப் சீரிஸ் கதை இதுதான்.. நடிகை சோனா ஓபன் டாக்..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com