Aamir Khan: ஹாலிவுட் நடிகர் அமீர்கான் மீண்டும் காதல் வயப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
Aamir Khan: ஹாலிவுட் நடிகர் அமீர்கான் மீண்டும் காதல் வயப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
Published on: February 15, 2025 at 2:32 pm
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் அமீர்கான். ஏற்கனவே இருமுறை திருமணம் ஆன இவர் தற்போது மூன்றாம் முறை பெண் ஒருவரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த உறுதிப்படுத்தப்படாத தகவல் வதந்தியாக கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அமீர்கான் ரீனா தத்தாவை 1996 இல், திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஜுனைத் கான் என்ற மகனும்; இரா கான் என்ற மகளும் பிறந்தனர். இவர்களின் 16 ஆண்டு கால திருமண வாழ்க்கை 2002 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் ஆமிர் கான் கிரண் ராவ் என்பவர் உடன் உறவில் இருந்தார். இவர்கள் 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு, 2011 ஆம் ஆண்டு ஆசாத் என்ற மகன் பிறந்தார்.
இந்த ஜோடியின் 15 ஆண்டுகால திருமண வாழ்க்கை 2021 இல் முடிவுக்கு வந்தது; இருவரும் பிரிந்து செல்வதாக அறிவித்தனர். அப்போது அமீர்கான் தான் இனி வரும் காலங்களில் சினிமாவில் கவனம் செலுத்த போவதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக அமீர்கான் காதல் வயப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூருவைச் சேர்ந்த கௌரி என்ற பெண்ணுடன் அமீர்கான் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பெண் சினிமா துறையைச் சேர்ந்தவர் இல்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் தங்களது உறவை ரகசியமாக வைத்திருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இன்னும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஆட்டோவில் வந்தவர், காரில் திரும்பினார்.. எப்படி இருக்கிறார் சைஃப் அலிகான்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com