Saif Ali Khan discharged: நடிகர் சைஃப் அலிகான் கத்திக் குத்து காயங்களுக்கு லீலாவதி மருத்துவமனையில் 5 நாள்கள் சிகிச்சைக்கு பின்னர் காரில் வீடு திரும்பினார். இவர் கத்திக் குத்து காயம் பட்ட போது ஆட்டோவில் மருத்துவமனை அழைத்து வரப்பட்டார்.
Saif Ali Khan discharged: நடிகர் சைஃப் அலிகான் கத்திக் குத்து காயங்களுக்கு லீலாவதி மருத்துவமனையில் 5 நாள்கள் சிகிச்சைக்கு பின்னர் காரில் வீடு திரும்பினார். இவர் கத்திக் குத்து காயம் பட்ட போது ஆட்டோவில் மருத்துவமனை அழைத்து வரப்பட்டார்.
Published on: January 21, 2025 at 7:35 pm
சைஃப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல்: நடிகர் சைஃப் அலி கான், பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, கத்தியால் தாக்கப்பட்டார். இந்த நிலையில், 5 நாட்களுக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை இங்குள்ள லீலாவதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 54 வயதான நடிகர், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் காரில் வீடு திரும்பினார்.
இந்த நிலையில், சிறிது தூரத்தில் அமைந்துள்ள பாந்த்ராவில் உள்ள தனது ‘சத்குரு ஷரன்’ இல்லத்தை அடைந்தார்.
ஜனவரி 16 ஆம் தேதி அதிகாலையில் தனது 12 வது மாடி வீட்டில் ஒரு நபரால் சைஃப் அலிகான் கத்தியால் தாக்கப்பட்டார். அவரை தாக்கியவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சைஃப் அலிகானின், கானின் கையில் இரண்டு மற்றும் கழுத்தின் வலது பக்கத்தில் ஒன்று என மூன்று காயங்கள் காணப்பட்டன. மேலும், முதுகு பகுதியில் ஓர் காயம் காணப்பட்டது.
இதில் கத்தி அப்படியே காணப்பட்டது. இந்தக் காயம் அறுவை சிகிச்சை மூலமாக சரி செய்யப்பட்டது. சைஃப் அலிகான் தாக்கப்பட்ட வழக்கில், வங்கதேசத்தைச் சேர்ந்த ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் முகமது ரோஹில்லா அமின் ஃபகிர் (30) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
#SaifAliKhan thanks his fans and well wishers for all their prayers and blessings pic.twitter.com/kF8TJH7oz6
— BollyHungama (@Bollyhungama) January 21, 2025
அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சைஃப் அலிகான் மீதான தாக்குதல் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com