Rape case against actor Siddique |திருவனந்தபுரம் மியூசியம் போலீசார் நடிகர் சித்திக் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
February 6, 2025
Rape case against actor Siddique |திருவனந்தபுரம் மியூசியம் போலீசார் நடிகர் சித்திக் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Published on: August 28, 2024 at 10:32 am
Rape case against actor Siddique | கேரளாவில் மூத்த நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளது. இளம் நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் திருவனந்தபுரம் மியூசியம் போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கை பதிவு செய்துள்ளனர்.
இளம் நடிகை தனது புகாரில், “சித்திக் தன்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்றும் மிரட்டல் தொடர்கிறது என்றும் தெரிவித்து இருந்தார்.
பாதிக்கப்பட்ட இளம் நடிகை நடிகர் சித்திக்கை 2016ஆம் ஆண்டு சந்தித்துள்ளார். அப்போது நடிகையை சித்திக் ஹோட்டலுக்கு அழைத்துள்ளார்.
முன்னதாக, இரண்டு நாட்களுக்கு முன்பு, அந்த பெண் தனது குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக வெளிப்படுத்தியதை அடுத்து, மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சித்திக் விலகினார்.
நடிகை ரேகா நாயரின் கார் மோதி ஒருவர் உயிரிழப்பு: டிரைவரிடம் போலீஸ் விசாரணை
2019 ஆம் ஆண்டில் பாலியல் துன்புறுத்தல் பற்றி முதலில் பேசிய அவர், 2016 ஆம் ஆண்டில் படங்களில் பணியாற்றுவது பற்றி விவாதிக்க அழைத்து சித்திக் தன்னிடம் தவறாக நடந்தார் என்று கூறினார்.
கடந்த வாரம் ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியானதன் மூலம் மலையாள திரையுலகில் குற்றச்சாட்டுகள் மீண்டும் எழுந்தன. இந்த நிலையில் ஊடகங்களிடம் தோன்றிய நடிகை, “தாம் 2016ல் பாதிக்கப்பட்டதாக கூறினார். மேலும் அச்சுறுத்தல் தொடர்கிறது” என்றார்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று, சித்திக் அந்த பெண்ணுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்தார். அதில் தமக்கு எதிராக குற்றவியல் சதி நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து, அம்மா சங்கத் தலைவரும், பிரபல நடிகருமான மோகன்லால் மற்றும் இதர உறுப்பினர்கள் கூண்டோடு தனது பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, ஒட்டுமொத்த நிர்வாகிகள் குழுவும் கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz
ட்விட்டர் https://x.com/DravidanTimes
இன்ஸ்டாகிராம் https://www.instagram.com/dravidantimes/
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com