Pradeep Ranganathan : இவர்கள் என் ரசிகர்கள் என்று சொல்ல நான் ஏன் கூச்சப்படணும் என்கிறார் நடிகர் பிரதீப் ரங்கநாதன்.
Pradeep Ranganathan : இவர்கள் என் ரசிகர்கள் என்று சொல்ல நான் ஏன் கூச்சப்படணும் என்கிறார் நடிகர் பிரதீப் ரங்கநாதன்.

Published on: April 8, 2026 at 11:34 am
Updated on: April 8, 2026 at 11:37 am
சென்னை, ஏப்.8, 2026: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் எல்.ஐ.கே., இந்தப் படம் நீண்ட இழுபறிக்கு பிறகு திரைக்கு வருகிறது. படத்தின் வெளியீடு பல முறை தள்ளிப் போய் உள்ளது. இந்நிலையில் படம் தற்போது ஏப்.10ஆம் தேதி திரைககு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் கலந்துகொண்டார். அப்போது அவர் தனது ரசிகர்கள் குறித்து மனம் திறந்து பேசினார். இது குறித்து பேசிய அவர், “நான் என்னோட ஃபேன்ஸ் என்று சொல்வதற்கு கொஞ்சம் கூச்சப்படுவேன். ஏன்னா ‘என்னடா அதுக்குள்ள உனக்கு ஃபேன்ஸா’ என்று சொல்வாங்க” என்றார்.
தொடர்ந்துப் பேசிய பிரதீப், “ஆனா நான் போகிற இடமெல்லாம் அவர்கள் காட்டுகின்ற அன்பையும், ஆதரவையும் பார்த்துட்டு அவங்க பேரை சொல்ல நான் ஏன் கூச்சப்படணும் என்று தோணுச்சு” என்றார். மேலும், “என்னோட ஃபேன்ஸ், உங்க எல்லோருக்கும் ரொம்ப நன்றி, நீங்க இல்லாம நான் இங்க இல்லை” எனவும் பிரதீப் ரங்கநாதன் கூறினார்
இதையும் படிங்க: என் அப்பா போன்றவர்- தனுஷை எனக்கு பிடிக்கும்.. விக்னேஷ் சிவன் ஓபன் டாக்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com