நடிகை நுஸ்ரத் ஜஹான் இ.டி. அலுவலகத்தில் ஆஜர்.. புகார் என்ன?

Nusrat Jahan questioned in ED : வீட்டு வசதி மோசடி வழக்கில் நடிகை நுஸ்ரத் ஜஹான் அமலாக்கத் துறை முன் ஆஜரானார்.

Published on: April 22, 2026 at 3:22 pm

கொல்கத்தா, ஏப்.22, 2026: நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நுஸ்ரத் ஜஹான், ஒரு வீட்டு வசதி மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) ஆஜரானார். தனது கணவரும் நடிகருமான யாஷ் தாஸ்குப்தாவுடன் வந்த ஜஹான், காலையில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்தபோது, செய்தியாளர்களிடம் பேச மறுத்துவிட்டார்.

எனினும் இந்த வழக்கு குறித்து அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “ஒரு வீட்டு வசதி மோசடி வழக்கு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் நிமித்தமாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகப் புதிய தகவல்கள் சில வெளிவந்துள்ளதால், அவர் நேரில் ஆஜராக வேண்டிய அவசியம் ஏற்பட்டது“ என்றார்.

புகார் என்ன?

ராஜர்ஹாட் பகுதியில் செயல்படுத்தப்பட்ட ஒரு வீட்டு வசதித் திட்டம் தொடர்பான மோசடி குற்றச்சாட்டுகளை இந்த மத்திய முகமை விசாரித்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஒரு நிறுவனம் வீடுகளை (பிளாட்களை) வழங்குவதாக உறுதியளித்து வாங்குபவர்களிடமிருந்து பணத்தைச் சேகரித்து ஏமாற்றி விட்டதாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : போட்டோகிராபர் சொன்ன அந்த வார்த்தை.. சந்திரமுகியாக மாறிய ஸ்ருதிஹாசன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com