Nirangal Moondru Release Date | கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறங்கள் மூன்று’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Nirangal Moondru Release Date | கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறங்கள் மூன்று’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on: November 1, 2024 at 11:17 pm
Nirangal Moondru Release Date | துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் நிறங்கள் மூன்று. அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் ஹைப்பர்லிங்க் திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ளது.
இந்த படத்துக்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியானது. இந்நிலையில், இந்த படம் சில பிரச்சினைகள் காரணமாக நீண்ட நாட்களாக ரிலீசுக்கு காத்திருக்கிறது. இந்த நிலையில் ‘நிறங்கள் மூன்று’ படம் வரும் 22ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ படம் வெளியாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க அபிஷேக் பச்சன் உடன் டேட்டிங்? பிரபல நடிகை ஓபன் டாக்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com