திருவனந்தபுரம், ஏப்.26 2025: மோகன்லால்-ஷோபனா நடிப்பில் வெளியான ‘துடாரம்’ திரைப்படம் 2025 ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான ‘எம்புரான்’ படத்திற்குப் பிறகு இரண்டாவது பெரிய ஓப்பனிங் படமாக மாறியுள்ளது. இந்தப் படம் ரூ.5.5 கோடி முதல் நாளில் வசூலித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை தருண் மூர்த்தி இயக்கியுள்ளார். இந்த நிலையில், துடாரம் முதல் நாளில் ரூ. 5.5 கோடி வசூலித்துள்ளது என சக்னில்க்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பிருத்விராஜ் சுகுமாரன்-மோகன்லாலின் ‘L2: எம்புரான்’ படத்திற்குப் பிறகு இந்த ஆண்டு ஒரு மலையாளப் படத்திற்கு கிடைத்த இரண்டாவது மிகப்பெரிய ஓப்பனிங் இதுவாகும்.
அந்தப் படம், முதல் நாளில் ரூ.18.6 கோடி வசூலித்து இருந்தது. இந்த நிலையில், மம்முட்டியின் ‘பசூக்கா’, ரசிகர்களின் விருப்பமான ‘ஆலப்புழா ஜிம்கானா’ மற்றும் இந்த ஆண்டின் முதல் வெற்றிப் படமான ‘ரேகாசித்ரம்’ ஆகியவை முறையே ரூ.3.2 கோடி, ரூ.2.65 கோடி மற்றும் ரூ.1.9 கோடி வசூலித்து இருந்தன.
மாம்பழக்காலம் (2004) படத்திற்குப் பிறகு மோகன்லால் மற்றும் ஷோபனா மீண்டும் இணைவது இதுவே முதல் முறை ஆகும். “தனது அன்புக்குரிய கார் ஒரு சட்ட சிக்கலில் சிக்கிக் கொள்ளும்போது வாழ்க்கை தலைகீழாக மாறும்” என்பதுதான் இந்தப் படத்தின் கதை எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : கேமராவுக்கு பின்னால் நடிகர்கள் எப்படி எல்லாம் மாறுவார்கள்.. நடிகை மாளவிகா மோகனன் ஓபன் டாக்..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்