சினிமா மொத்த தொழிலாளர்கள் யூனிட்டுக்கும் எம்ஜிஆர் ஒருமுறை வான்கோழி பிரியாணி போட்டுள்ளார்.
சினிமா மொத்த தொழிலாளர்கள் யூனிட்டுக்கும் எம்ஜிஆர் ஒருமுறை வான்கோழி பிரியாணி போட்டுள்ளார்.
Published on: November 21, 2024 at 12:09 pm
MGR’s act of resilience | தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத கதாநாயகனாக திகழ்ந்தவர் எம்ஜிஆர். சினிமா மட்டுமின்றி அரசியலிலும் தடம் பதித்த இவர், தொழிலாளர் நலனில் மிகவும் அக்கறை கொண்டவர். ஒருமுறை சினிமா சூட்டிங்கின் போது தொழிலாளி ஒருவர் காலை உணவு சாப்பிட்டியா என இன்னொரு தொழிலாளி இடம் கேட்டுள்ளார்.
அப்போது அந்த தொழிலாளி சலித்துக் கொண்டு தனக்கு உணவு கிடைக்காததை கூறியுள்ளார். மேலும் மதியம் என்ன வான்கோழி பிரியாணியா போடப் போகிறார்கள் எனவும் கேட்டுள்ளார். இதைக் கேட்ட எம்ஜிஆர் மனிதாபிமானத்துடன் ஓர் முடிவை எடுத்தார். தன்படி சினிமா யூனிட்டில் உள்ள அத்தனை தொழிலாளர்களுக்கும் அன்றைய தினம் வான்கோழி பிரியாணி கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார்.
ஆனால் அன்றைய தினம் வியாழக்கிழமை என்பதால் எம்ஜிஆர் அசைவம் சாப்பிடவில்லை. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த எம்ஜிஆரின் உதவியாளர் முத்து, அண்ணே நீங்களும் அசைவம் சாப்பிடும் மாதிரி ஒரு நல்ல நாளில் இந்த காரியத்தை செய்திருக்கலாமே? என வினவி உள்ளார். இதற்கு பதில் அளித்த எம்ஜிஆர், நாம் உழைப்பதே இந்த ஒரு ஜான் வயிற்றுக்காக தானே.. அனைவருக்கும் நல்ல உணவு கிடைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க 20 ஆண்டு சினிமா வாழ்க்கை; நயன்தாராவின் சொத்து மதிப்பு தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com