Actor Dhanush: நடிகர் தனுஷ் செட்டிலாக விரும்பும் நாடு எது தெரியுமா? இது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
Actor Dhanush: நடிகர் தனுஷ் செட்டிலாக விரும்பும் நாடு எது தெரியுமா? இது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
Published on: June 25, 2025 at 9:54 am
சென்னை, ஜூன் 24 2025: நடிகர் தனுஷ் குறித்து முகம் 10 என்ற பகுதியில் இருந்து ஆனந்த விகடன் பல்வேறு தகவல்களை அளித்துவருகிறது.
தனுஷ் செட்டிலாக விரும்பும் நாடு
இதில் நடிகர் தனுஷ் செட்டிலாக விரும்பும் நாடு குறித்த தகவலும் உள்ளது. அந்த வகையில், நடிகர் தனுஷூக்கு இங்கிலாந்து மற்றும் லண்டனம் மிகவும் பிடிக்குமாம். செட்டிலாக வேண்டும் என்றால் இந்த நாட்டில் செட்டிலாக வேண்டும் என்பாராம். மேலும் நடிகர் தனுஷ் டொயோட்டா வெல்பயர் காரில் பயணிக்க அதிகம் விரும்புவாராம்.
மேலும், எப்போதாவது இனோவா காரில் பயணிப்பதும் அவருக்கு பிடிக்கும். இதற்கிடையில் தனுஷின் சொந்தப் பெயர் குறித்த தகவலும் அதில் இடம் பெற்றுள்ளது. தனுஷின் சொந்தப் பெயர் வெங்கடேஷ் பிரபு ஆகும். இவரை வீட்டில் பிரபு என்றுதான் கூப்பிடுவார்களாம்.
பிடித்த உணவு
நடிகர் தனுஷூக்கு பிடித்த உணவு, சோறு, பூண்டுக் குழம்பு, அப்பளம் ஆகும். மேலும் இவருக்கு உருளைக் கிழங்கு வறுவலும் பிடித்தமான உணவாகும். மேலும், சினிமா படப்பிடிப்பு முடிந்து இரவு 2 மணிக்கு லேட்டாக வந்தாலும், வியர்க்க விறுவிறுக்கெ உடற்பயிற்சி செய்து அதன்பின்னர்தான் அவர் உறங்கச் செல்வாராம்.
இதையும் படிங்க : சிம்பு, தனுஷூடன் புதிய படம்? மௌனம் கலைத்த வெற்றி மாறன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com