Actor Shine Tom Chacko in drug case: போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ உட்பட 6 பேரை கேரள நீதிமன்றம் விடுவித்துள்ளது.
Actor Shine Tom Chacko in drug case: போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ உட்பட 6 பேரை கேரள நீதிமன்றம் விடுவித்துள்ளது.
Published on: February 11, 2025 at 10:12 pm
போதைப்பொருள் வழக்கில் மலையாள திரைப்பட நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் 6 பேரை கேரள நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (பிப்.11, 2025) விடுவித்தது.
இவர்கள் மீது 2015 ஆம் ஆண்டு போதைப் பொருள் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு, எர்ணாகுளம் முதல் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி முன்பு நடந்தது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டது என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும், நீதிபதி தனது தீர்ப்பில் 1985 ஆம் ஆண்டு போதைப்பொருள் மற்றும் மனநோய் பொருட்கள் (என்.டி.பி.எஸ்) சட்டத்தின் கீழ் நிரூபிக்க தவறிவிட்டது என்றார்.
வழக்கு கடந்து வந்த பாதை
கொச்சியின் கடவந்திராவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஜனவரி 2015 இல் நடத்தப்பட்ட சோதனையின் போது நடிகரும் நான்கு பெண் மாடல்களும் கைது செய்யப்பட்டனர்.
அப்போது, நடிகர் கோகோயின் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மீது என்.டி.பி.எஸ் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கேரளத்தில் கோகோயின் தொடர்பான முதல் வழக்கு இதுவாகும் என கருதப்படுகிறது.
விடுவிப்பு
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ உள்பட 7 பேர் இன்று விடுவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க : மலையாள பக்கம் திரும்பிய நயன்தாரா.. 16 ஆண்டுக்குபின் இப்படி ஓர் படமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com