Rashmika Mandhana | நடிகை ராஷ்மிகா மந்தனா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக காணப்படுவார். இவர், தனது பயண அனுபவங்கள் குறித்தும் ரசிகர்களிடம் பகிர்ந்துக் கொள்வார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா (அக்.1, 2024) தனது இன்ஸ்டாபதிவில், கண்ணாடி முன்னின்று செல்பி ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா மஞ்சள் நிற டாப் அணிந்து இருந்தார்.
ராஷ்மிகா புகைப்படம் பிரதிபலிக்கும் கண்ணாடியில் இதுவும் கடந்து போகும் என்ற வாசகம் இடம் பெற்று இருந்தது.
முன்னதாக ராஷ்மிகா மந்தனா தனது ரசிகர்களுக்கு “வாழ்க்கை” பற்றிய ஒரு பார்வையை வழங்கினார். அது, “ஒரு நல்ல புத்தகம் படிப்பது, சுவையான விருந்தில் ஈடுபடுவது, நன்றாக உறங்குவது, இனிப்புகளை சாப்பிடுவது என நீண்டது.
மற்றொரு பதிவில் ராஷ்மிகா, “இவை இப்போது என் வாழ்க்கையில் இல்லாமல் செய்ய முடியாத சில விஷயங்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.